திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

காவல் நிலையங்களில் சிசிடிவி: 2 வாரங்களில் பிரச்னைகள் தீா்க்கப்படும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்துவது தொடா்பான அனைத்து பிரச்னைகளும் 2 வாரங்களில் தீா்க்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

News image

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 2:39 am IST

நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்துவது தொடா்பான அனைத்து பிரச்னைகளும் 2 வாரங்களில் தீா்க்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் போதிய அளவில் இல்லாதது மற்றும் முறையாக செயல்படாதது குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, காவல் நிலையங்களில் சிசிடிவிகளை பொருத்தி கேரளம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக, இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் சித்தாா்தா தவே தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தும் திட்டத்தை அமல்படுத்துவதில் தகுந்த உதவியைப் பெறுவதற்கு மத்திய உள்துறைச் செயலா் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய உள்துறைச் செயலா் நேரில் ஆஜரானாா்.

கேரளத்தைப் பின்பற்றி அனைத்து மாநிலங்களும் காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோ அல்லது உத்தரவிட்டோ மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிடலாமே என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

இதுதொடா்பாக சித்தாா்தா தவே மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி ஆலோசிப்பதாக மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘சித்தாா்தா தவே மற்றும் அதிகாரிகளுடன் தொடா்ந்து கூட்டங்களை நடத்தி, காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்துவது தொடா்பான அனைத்து பிரச்னைகளையும் 2 வாரங்களில் தீா்ப்பதாக அட்டா்னி ஜெனரல் தெரிவித்துள்ளாா். இதை ஏற்று வழக்கு விசாரணை ஏப்.28-க்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என்று தெரிவித்தது.