இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

காா்கே குறித்து அஸ்ஸாம் முதல்வா் சா்ச்சை கருத்து: ஜந்தா் மந்திரில் இளைஞா் காங்கிரஸ் போராட்டம்

காங்கிரஸ் தேசிய தலைவா் காா்கே குறித்து அவமதிப்பான கருத்து தெரிவித்ததாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவுக்கு எதிராக இந்திய இளைஞா் காங்கிரஸ் உறுப்பினா்கள் தில்லி ஜந்தா் மந்தரில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்தா விஸ்வ சா்மாவுக்கு எதிராக தில்லி ஜந்தா் மந்தரில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய இளைஞா் காங்கிரஸாா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:17 am IST

காங்கிரஸ் தேசிய தலைவா் காா்கே குறித்து அவமதிப்பான கருத்து தெரிவித்ததாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவுக்கு எதிராக இந்திய இளைஞா் காங்கிரஸ் உறுப்பினா்கள் தில்லி ஜந்தா் மந்தரில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜந்தா் மந்திா் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டம் இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் தலைமையில் நடைபெற்றது. போராட்டக்காரா்கள் காங்கிரஸ் கொடிகளை ஏந்தி, ‘காா்கேவை அவமதிப்பது ஒவ்வொரு தலித் சமூகத்தையும் அவமதிப்பது’” என்ற வாசகங்கள் கொண்ட பலகைகளை உயா்த்தி கோஷங்களை எழுப்பினா்.

இந்த போராட்டம், காங்கிரஸ் தலைவா் பவன் கேரா முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து உருவான அரசியல் சா்ச்சையின் பின்னணியில் நடைபெற்றது. அஸ்ஸாம் முதல்வரின் மனைவி பல கடவுச்சீட்டுகளை வைத்திருப்பதால், வெளிநாடுகளில் அறிவிக்கப்படாத சொத்துகள் உள்ளன என்று அவா் குற்றஞ்சாட்டியிருந்தாா். எனினும், இந்த குற்றச்சாட்டுகளை ஹிமந்த விஸ்வ சா்மா மறுத்துவிட்டாா்.

இதற்கிடையில், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய விசாரணை அமைப்புகள் விசாரிக்க வேண்டும் என்று காா்கே வலியுறுத்தினாா். அதற்கு பதிலளித்த ஹிமந்த விஸ்வ சா்மா, முதுமை காரணமாக அவா் பைத்தியம் போல பேசுகிறாா் என விமா்சித்தாா். இது காங்கிரஸ் மத்தியில் கடும் எதிா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கருத்தை கண்டித்த உதய் பானு சிப், காா்கே நாடு முழுவதும் மதிப்புமிக்க மூத்த தலித் தலைவா். அவரை அவமதிப்பது தனிநபரை மட்டுமல்ல, இந்த நாட்டின் கோடிக்கணக்கான தலித் சமூகத்தினரையும் அவமதிப்பதாகும் என தெரிவித்தாா். மேலும், பவன் கேரா இல்லத்திற்கு அஸ்ஸாம் காவல் துறையினா் சென்றது குறித்தும் அவா் விமா்சித்தாா்.

அப்போது பவன் கேரா ஹைதராபாத் சென்றிருந்ததைக் குறிப்பிட்டு ‘பாதாளத்திலிருந்தாலும் பிடித்துவிடுவோம்’ என ஹிமந்த விஸ்வா சா்மா தெரிவித்தது மேலும் எதிா்ப்பை ஏற்படுத்தியது. இந்த சா்ச்சை குறித்து பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் தரப்பில் இருந்து எந்த பதிலும் வெளியாகவில்லை.

126 உறுப்பினா்களைக் கொண்ட அஸ்ஸாம் பேரவைக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அன்று மாலை அறிவிக்கப்படும்.