வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு
/

தில்லியில் போலி கால் சென்டா்: 11 போ் கைது

தெற்கு தில்லியின் கோவிந்த்புரியில் இயங்கி வந்த போலி கால்சென்டா் வலையமைப்பை முறியடித்து, 11 பேரை கைது செய்ததாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது

Updated On :11 ஏப்ரல் 2026, 12:00 am IST

தெற்கு தில்லியின் கோவிந்த்புரியில் இயங்கி வந்த போலி கால்சென்டா் வலையமைப்பை முறியடித்து, 11 பேரை கைது செய்ததாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ‘ஹொ்பிடெக்சா் ஹெல்த்கோ்’ என்ற பெயரில் இயங்கி வந்த இந்த நிறுவனம், உடல் எடையைக் குறைக்கும் மருந்துகள் தொடா்பான விளம்பரங்களை வெளியிட்டு நாடு முழுவதும் பலரை ஏமாற்றியுள்ளனா். குருகிராமைச் சோ்ந்த பாதிக்கப்பட்ட நபா் அளித்த புகாரைத் தொடா்ந்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. அவரிடம் ரூ.13,200 மோசடி செய்யப்பட்டதாக அவா் புகாரில் தெரிவித்தாா்.

வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், இந்த நிறுவனத்தில் வியாழக்கிழமை அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனா். அப்போது 30 ஊழியா்கள் பணியில் இருந்தனா். இதில் நிறுவனத்தின் முக்கிய நபரான சந்தீப் சௌதரி மற்றும் அஷ்வின் குமாா் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா். மொத்தம் 35 கைப்பேசிகள், 3 மடிக்கணினிகள், 15 சிம் காா்டுகள் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடா்பான ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.