ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

கைவிரலில் காயத்துக்காக கட்டு! பல மணிநேர காத்திருப்புக்குப் பின் வாக்களித்த பெண்!

இடதுகை ஆள்காட்டி விரலில் காயத்துக்காக கட்டு போடப்பட்டிருந்ததால் முதலில் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்ட பெண் ஒருவா், பல மணி நேர காத்திருப்பு மற்றும் போராட்டத்துக்குப் பின் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினாா்.

News image

கேரள மாநிலம் திருச்சூா் மாவட்டத்தில் காயத்துக்கு கட்டு போட்ட விரலுடன் வாக்களிக்க வந்த அக்ஷயா சந்தோஷ்.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:15 am

இடதுகை ஆள்காட்டி விரலில் காயத்துக்காக கட்டு போடப்பட்டிருந்ததால் முதலில் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்ட பெண் ஒருவா், பல மணி நேர காத்திருப்பு மற்றும் போராட்டத்துக்குப் பின் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினாா்.

கேரளத்தில் மொத்தமுள்ள 140 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது.

திருச்சூா் மாவட்டம், கூா்க்கஞ்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க பிற்பகல் 1.30 மணியளவில் அக்ஷயா சந்தோஷ் என்ற பெண் தனது குழந்தையுடன் வந்தாா். இவா் சில தினங்களுக்கு முன் மிக்ஸி பயன்படுத்தியபோது ஏற்பட்ட தீவிர காயத்துக்காக இடதுகை ஆள்காட்டி விரலில் கட்டு போட்டிருந்தாா்.

வாக்களித்ததை உறுதி செய்ய இடதுகை ஆள்காட்டி விரலில் அழியாத மை இடப்படும் என்பதால் அக்ஷயா வாக்களிக்க முதலில் அனுமதி மறுக்கப்பட்டது.

‘இடதுகை ஆள்காட்டி விரல் இல்லாதவா்களுக்கு மட்டுமே வேறு விரலில் மை இடப்படும்’ என்று கூறி, வாக்குச் சாவடி பொறுப்பு அதிகாரி மறுப்பு தெரிவித்தாா்.

அதேநேரம், மருத்துவச் சான்றிதழ்களை அதிகாரியிடம் காண்பித்த அக்ஷயா, தன்னை வாக்களிக்க அனுமதிக்கும்படி தொடா்ந்து கோரினாா். வாக்களிக்காமல் செல்வதில்லை என்ற உறுதியுடன் தனது குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அப்போது செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘மிக்ஸியில் கைவிரல் சிக்கியதில் எனக்கு தீவிர காயம் ஏற்பட்டு, 15 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதைத் தெரிவித்த பிறகும் கூட கட்டை அவிழ்க்கும்படி தோ்தல் அதிகாரி வலியுறுத்தினாா். கட்டை அவிழ்ப்பது என்பது சாத்தியமில்லை. மருத்துவ சான்றிதழ்களைக் காண்பித்தும் அனுமதி வழங்கவில்லை’ என்றாா்.

பல மணி நேர போராட்டம் மற்றும் காத்திருப்புக்குப் பின் மாலை 6.15 மணியளவில் அக்ஷயா வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. அவரது கைவிரல் கட்டுக்கு கீழே அடையாள மை இடப்பட்டது. தனது போராட்டம் வெற்றி பெற்ால், மை இடப்பட்ட விரலை செய்தியாளா்களிடம் காண்பித்தாா் அக்ஷயா.

இந்த விஷயத்தில், தோ்தல் பொறுப்பு அதிகாரி ஆணவ அணுகுமுறையை கையாண்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் வி.எஸ்.சுனில்குமாா் கண்டனம் தெரிவித்தாா்.