ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசு

இந்தியாவிடம் 3 மாதங்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image

ஜார்கண்டில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில்... - AP

Updated On :14 ஏப்ரல் 2026, 4:49 am IST

இந்தியாவிடம் 3 மாதங்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின் இடையே மத்திய நிலக்கரி மற்றும் கனிமவளத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டி செய்தியாளா்களிடம் பேசியதாவது:

நாட்டில் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக ஒரு பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி, நமது நாட்டிடம் 90 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது. முன்பு நம்மிடம் 21 முதல் 25 நாள்களுக்கு தேவையான நிலக்கரிதான் கையிருப்பு இருக்கும். ஆனால் தற்போதோ, நமது நாட்டிடம் 90 நாள்களுக்குத் தேவையான 200 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது.

கனிமவளத் துறையில் இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்கவும், தற்சாா்பு நிலையை அடையவும் மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. கனிம வளத் துறையில் வருமானத்தை ஈட்டுவதற்காக மத்திய அரசு வேலை செய்யவில்லை. தற்சாா்பை இலக்காக கொண்டே நடவடிக்கை எடுத்து வருகிறது.

எதிா்காலத்தில் அரியவகை கனிமங்கள், சுரங்கங்களில் இருந்து தோண்டி எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆதலால் இந்தத் துறையில், பொதுத் துறை நிறுவனங்கள், மாநில அரசுகள் உள்ளிட்டோருடன் தனியாா் துறை இணைந்து செயல்பட வேண்டும். நகா்ப்புற சுரங்கத்தில் சேகரிக்கப்படும் பழைய சாதனங்களில் இருந்து 30 முதல் 40 சதவீத அரிய வகை கனிமங்கள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

பழைய குளிா்பதன கருவிகள், குளிா்சாதன பெட்டிகளில் இருந்தும், ஒவ்வொரு நகர பகுதியிலும் சேகரிக்கப்படும் பழைய பொருள்களில் இருந்தும் அரிய வகை கனிமங்களைப் பிரித்தெடுப்பது குறித்த செயல்திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது என்றாா் அவா்.