தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மகாராஷ்டிரம் இடைத்தேர்தல்: 9 மணி நிலவரம்!

மகாராஷ்டிரம் இடைத்தேர்தல் 9 மணி நிலவரப்படி..

polling stations

வாக்குச்சாவடி - DPS

Published On :

மகாராஷ்டிரத்தில் உள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், 9 மணி நிலவரப்படி பாராமதியில் 8 சதவிகிதம், ரஹுரியில் 6 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையவுள்ளது.

மகராஷ்டிரத்தின் முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவார், ஜனவரி 28 அன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாராமதி சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமானது.

அஜீத் பவாரின் மனைவியும், துணை முதல்வரும், என்சிபி தலைவருமான சுநேத்ரா பவார் மற்றும் 22 பிற வேட்பாளர்கள் இத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபரில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சிவாஜி கார்டிலே காலமானதைத் தொடர்ந்து, ரஹுரி சட்டப்பேரவைத் தொகுதி காலியானது. ரஹுரி தொகுதியில் சிவாஜி கார்டிலேவின் மகன் அக்‌ஷய் கார்டிலே போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து என்சிபி (எஸ்பி) வேட்பாளர் கோவிந்த் மொகாடே மற்றும் வஞ்சித் பகுஜன் அகாடியைச் சேர்ந்த சந்தோஷ் சால்கே ஆகியோர் களத்தில் உள்ளனர்.

Summary

Eight per cent voter turnout was recorded in Baramati and six per cent in Rahuri in the first two hours of voting on Thursday as polling was underway for bypolls to the two assembly constituencies in Maharashtra, election officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.