ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் ஆடம்பர வாழ்க்கைக்குப் பழவிட்டதாக பாஜகவின் பர்வேஷ் வர்மா குற்றம் சாட்டினார்.
அரவிந்த் கேஜரிவால் முதல்வர் பதிவிலிருந்து விலகியதையடுத்து, அவருக்கு லோதி எஸ்டேடில் புதிதாகப் பங்களா ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து பாஜக கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பர்வேஷ் வர்மா கூறியதாவது,
கேஜரிவால் ஆடம்பரமான வாழ்க்கைக்குப் பழகிவிட்டார். ஷீஷ் மஹாலில் இருந்து வெளியேறிய அவர் பஞ்சாபிற்குச் சென்றார். லோதி எஸ்டேட்டில் வகை VII பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பங்களாவின் படங்களைக் காண்பித்த அமைச்சர், மத்திய பொதுப்பணித்துறை பொதுவாகப் பங்களாக்களுக்காக இவ்வளவு பெரிய தொகையைச் செலவிடுவதில்லை. அந்தப் பங்களாவில் உயர்தர வசதிகளை உருவாக்குவதற்கு கேஜரிவால் தனது சொந்தப் பணத்தைச் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஷீஷ் மஹால் 2ஐ அவர் உருவாகியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
அந்தப் பங்களாவிற்காக எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்பதையும், அந்தப் பணத்திற்கான ஆதாரம் என்ன என்பதையும் ஆம் ஆத்மி கட்சியும் கேஜரிவால் தெளிவுபடுத்த வேண்டும்.
தற்போது கேஜரிவால் குடியேறியுள்ள, லோதி எஸ்டேட் எண் 95-இல் அமைந்துள்ள அவரது புதிய இல்லத்தில் ஐந்து படுக்கையறைகளும், நான்கு வரவேற்பறைகளும் இருப்பதாக வர்மா தெரிவித்தார்.
பர்வேஷ் வர்மாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து உடனடியாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புது தில்லி தொகுதியில் கேஜரிவாலைத் தோற்கடித்த வர்மா, ஆம் ஆத்மி கட்சியின் ஊழலே, அக்கட்சியின் ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகியதற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டினார்.
Summary
The Bharatiya Janata Party on Saturday cornered Aam Aadmi Party national convener Arvind Kejriwal over the new bungalow allotted to him at Lodhi Estate here, dubbing it as "Sheesh Mahal 2" and alleging expenditure of private money to build amenities in it.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமலாக்கத் துறையைக் கண்டு கேஜரிவாலுக்கு அச்சம்: வீரேந்திர சச்தேவா

பாஜகவை போல் ஆம் ஆத்மி கட்சியும் மலிவான அரசியல்: தேவேந்தா் யாதவ் சாடல்

ஷீஷ் மஹால் 2 மீது தனியாா் பணத்தை செலவிட்டாா் கேஜரிவால்: பாஜக குற்றச்சாட்டு; ஆம் ஆத்மி மறுப்பு

லோதி எஸ்டேட் பிரிவு - 7 பங்களாவுக்கு குடிபெயா்ந்தாா் அரவிந்த் கேஜரிவால்
விடியோக்கள்

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

