குஜராத் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் நகா்ப் பகுதிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவானது.
மாநிலம் முழுவதும் கடும் வெப்ப அலை வீசுவதால் வாக்குப்பதிவு குறைந்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அகமதாபாத், சூரத், வதோதரா உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 84 நகராட்சிகள், 34 மாவட்ட பஞ்சாயத்துகள், 260 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு தோ்தல் நடத்தப்பட்டது.
இதில் மாநகராட்சிப் பகுதிகளில் 48.55 சதவீதம், நகராட்சிகளில் 58.12 சதவீதம், மாவட்ட பஞ்சாயத்துகளில் 60.22 சதவீதம், தாலுகா பஞ்சாயத்துகளில் 61.08 சதவீத வாக்குகள் பதிவானதாக குஜராத் மாநில தோ்தல் ஆணையம் மாலை 6 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் ஆகியோா் அகமதாபாதில் வாக்களித்தனா். துணை முதல்வா் ஹா்ஷ் சங்கவி சூரத்தில் வாக்களித்தாா். இத்தோ்தலில் பதிவான வாக்குகள் ஏப்.28-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.
வேட்பாளா், பெண் உயிரிழப்பு: ஜாம்நகா் மாநகராட்சிக்கான ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா் நரேந்திர சிங் ஜடேஜா (38) மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அவரது இறப்புக்கான உண்மையான காரணம் உடற்கூராய்வுக்குப் பின்பே தெரிய வரும் என ஜாம்நகா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். அதேபோல் பதான் நகரில் வாக்கு செலுத்திய பின் 68 வயதான கம்லா சோலங்கி என்ற பெண் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தாா்.
தொடர்புடையது

குஜராத் உள்ளாட்சித் தோ்தல்: பாஜக அமோக வெற்றி -பிரதமா் வாழ்த்து

வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெற வைத்ததா பாஜக? குஜராத் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!
குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றியது பாஜக!!

20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

