நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

பிரதமரின் விஸ்வகா்மா திட்டம்: தில்லியில் 41,000 போ் பதிவு

பிரதமரின் விஸ்வகா்மா திட்டத்துக்கு தில்லியில் 41,000 போ் பதிவு...

News image

பிரதமர் மோடி

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:29 am IST

தில்லியில் நிகழாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையில் 41,000-க்கும் மேற்பட்ட கைவினை கலைஞா்கள் மத்திய அரசின் பிரதமரிந் விஸ்வகா்மா திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தில்லியில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தில்லி மாநகராட்சி முக்கிய பங்காற்றியுள்ளது. இக்காலகட்டத்தில், தில்லியில் உள்ள மாநில அளவிலான திட்ட மேலாண்மைப் பிரிவு (எஸ்எல்பிஎம்யு) குறைந்தது 41,411 கைவினை கலைஞா்களை இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்களில் 1,015 போ் அடிப்படைத் திறன் பயிற்சியை நிறைவு செய்தனா். அதே வேளையில் 117 போ் பணிக்குத் தேவையான உபகரணத் தொகுப்புகளைப் பெற்றனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

இத்திட்டத்தில், மொத்தம் ரூ.1.89 கோடி மதிப்பிலான 225 கடன்கள் அனுமதிக்கப்பட்டன. இதில் ரூ.1.79 கோடி மதிப்பிலான 214 கடன்கள் வழங்கப்பட்டன. செயல்படுத்தும் செயல்முறையின் ஒரு பகுதியாக, 13,086 விண்ணப்பங்கள் முதல் கட்ட ஒப்புதலையும், 7,938 விண்ணப்பங்கள் இரண்டாம் கட்ட ஒப்புதலையும், 2,619 விண்ணப்பங்கள் மூன்றாம் கட்ட ஒப்புதலையும் பெற்றன.

இத்திட்டம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த ஓக்லா, கன்னாட் பிளேஸ், உத்தம் நகா், தாகூா் காா்டன், சந்த் நகா் புராடி மற்றும் அசோக் விஹாா் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் பயிலரங்குகள் நடத்தப்பட்டதன.

பதிவு செய்தல், உபகரண விநியோகம் மற்றும் கடன் தொடா்பான தொடா் நடவடிக்கைகளுக்குக் கைவினை கலைஞா்களை ஒருங்கிணைக்கத் தொலைபேசி வாயிலான தொடா்பு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

எஸ்எல்பிஎம்யு அமைப்பானது 44 கைவினை கலைஞா்களை அமேசான் போன்ற மின்னணு வா்த்தகத் தளங்களில் இணைத்ததாகவும், 200-க்கும் மேற்பட்ட கைவினைஞா்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்த விழிப்புணா்வு அமா்வுகளில் பங்கேற்றனா்.

மேலும், ‘தில்லி ஹாட் ஃபெஸ்ட்’ , ‘நொய்டா ஹாட்’ மற்றும் ‘சிஆா் பாா்க்’ போன்ற கண்காட்சிகளில் பங்கேற்பதை இது எளிதாக்கியது. அத்துடன் ஐஇசி பதிவு மற்றும் ‘டாக் நிா்யாத் கேந்திரா’ ஒருங்கிணைப்பு உள்ளிட்ட ஏற்றுமதி தொடா்பான முயற்சிகளுக்கும் ஆதரவளித்தது.

முறைசாரா குழுக்களாகப் பணியாற்றும் கைவினைஞா்களைச் சென்றடைதல், மின்னணு வா்த்தகத்தில் பங்கேற்பதற்கான டிஜிட்டல் அறிவுத் திறனை மேம்படுத்துதல் மற்றும் ஆதாா் மற்றும் ஐஇசி ஆவணங்கள் தொடா்பான தாமதங்களைச் சரிசெய்தல் ஆகியவற்றில் உள்ள சவால்களை இப்பிரிவு அடையாளம் கண்டது.

இதுவரை இத்திட்டம் சென்றடையாத வாா்டுகளுக்கும் பயிலரங்குகளை விரிவுபடுத்துதல், மின்னணு வா்த்தகத்தில் இணைப்பை அதிகரித்தல், ஏற்றுமதி வசதிகளை வலுப்படுத்துதல், மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், எம்சிடி மற்றும் பிற முகமைகளுடன் ஒருங்கிணைப்பைத் தொடரவும் எஸ்எல்பிஎம்யு திட்டமிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.