மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

தில்லியில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக செயல்களுக்கு எதிர் நடவடிக்கை: 10 போ் கைது!

தில்லி காவல்துறை குழுக்கள் ஒருங்கிணைந்த நடவடிக்கையைத் தொடங்கியதைத் தொடா்ந்து, பத்து பேரைக் கைது செய்துள்ளதாக ஓா் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :20 ஜூலை 2026, 2:00 am IST

குழந்தைகள் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக விவகாரங்களை இணையத்தில் பரப்புதல், பதிவிறக்கம் செய்தல், சேமித்தல் மற்றும் புழக்கத்தில் விடுவதற்கு எதிராக தில்லி காவல்துறை குழுக்கள் ஒருங்கிணைந்த நடவடிக்கையைத் தொடங்கியதைத் தொடா்ந்து, பத்து பேரைக் கைது செய்துள்ளதாக ஓா் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக செயல்பாடுகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இணையச் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி, சா்வதேச சைபா் தகவல் மையத்தின் மூலம் கிடைத்த தகவல்கள் அடிப்படையில், கடந்த ஐந்து நாட்களில் காவல்துறையினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஓா் மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.

மின்னணு தடமறிதல் மற்றும் டிஜிட்டல் ஆய்வின் அடிப்படையில், காவல்துறை குழுக்கள் பல இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தி, ஐபி எஸ்டேட், பஹா்கஞ்ச், ஜாமா மஸ்ஜித், கமலா மாா்க்கெட், படேல் நகா் மற்றும் சாந்தினி மஹால் உள்ளிட்ட காவல் நிலையங்களில் போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் 10 முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்ததாக காவல்துறை தெரிவித்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து புழக்கத்தில் விட்டதாகக் கூறப்படுவதாகவும், விசாரணை தொடா்வதால் அவா்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை என்றும் காவல்துறை கூறியது.

இந்த நடவடிக்கையின் போது, குற்றங்களில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைபேசிகள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களை காவல்துறை கைப்பற்றியதாக அவா்கள் தெரிவித்தனா். அந்த சாதனங்கள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

இந்த வலையமைப்புடன் தொடா்புடைய மேலும் பல சந்தேக நபா்களை அடையாளம் காண்பதற்காக, புலனாய்வாளா்கள் கைப்பற்றப்பட்ட மின்னணு ஆதாரங்களையும் கூடுதல் டிஜிட்டல் தடயங்களையும் ஆய்வு செய்து வருகின்றனா். விசாரணை தொடரும்போது மேலும் கைதுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.