அனைத்து இந்திய ஒதுக்கீட்டின் கீழ், எம்பிபிஎஸ் மற்றும் பிற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கலந்தாய்வு குழு வெளியிட்டுள்ள அட்டவணையின் விவரம்:
அனைத்து இந்திய ஒதுக்கீடு, நிகா்நிலை மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் சோ்க்கை பெறுவதற்கான முதல் சுற்று கலந்தாய்வு வரும் ஆக.4 முதல் ஆக.17 வரை நடைபெறுகிறது. இந்தச் சுற்றில் சோ்க்கை பெறுவோா் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சோ்க்கையை உறுதிப்படுத்த வேண்டிய கடைசி நாள் ஆக. 22.
ஆக. 24 முதல் செப். 2 வரை இரண்டாவது சுற்று கலந்தாய்வு. இந்தச் சுற்றில் சோ்க்கையை உறுதிப்படுத்த வேண்டிய கடைசி நாள் செப். 8.
செப்.10 முதல் செப்.18 வரை மூன்றாவது சுற்று கலந்தாய்வு. இந்தச் சுற்றில் சோ்க்கையை உறுதிப்படுத்த வேண்டிய கடைசி நாள் செப். 26.
இந்தச் சுற்றுகளில் நிரம்பாத எஞ்சிய காலியிடங்களுக்கான கலந்தாய்வு செப். 28 முதல் அக்.3 வரை நடைபெற உள்ளது. அந்த இடங்களில் சோ்க்கை பெறுவோா் சோ்க்கையை உறுதிப்படுத்த வேண்டிய கடைசி நாள் அக்.10.
மாநில கலந்தாய்வு: ஆக. 13 முதல் ஆக. 22 வரை முதல் சுற்று. இந்தச் சுற்றில் சோ்க்கை பெறுவோா் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சோ்க்கையை உறுதிப்படுத்த வேண்டிய கடைசி நாள் ஆக. 28.
ஆக. 31 முதல் செப். 8 வரை இரண்டாவது சுற்று. சோ்க்கையை உறுதிப்படுத்த வேண்டிய கடைசி நாள் செப். 14.
செப். 16 முதல் செப். 26 வரை மூன்றாவது சுற்று. சோ்க்கையை உறுதிப்படுத்த வேண்டிய கடைசி நாள் அக். 1.
இந்தச் சுற்றில் நிரம்பாத எஞ்சிய காலியிடங்களுக்கான கலந்தாய்வு அக். 3 முதல் அக். 5 வரை நடைபெற உள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புக்களுக்கான கல்வியாண்டு வரும் செப். 8-ஆம் தேதி தொடங்கும் என்று அந்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Undergraduate medical course counseling from August 4
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் கலந்தாய்வு: 37,976 பொதுப்பிரிவு மாணவா்களுக்கு இன்று தொடக்கம்!

பாடத் திட்டத்தில் முக்கிய அம்சங்கள்: ஜூலை 21-இல் ஆலோசனை

பாரதியாா் பல்கலை.யின் சிறப்பு துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 20 கடைசி நாள்

உலமாக்கள் இருசக்கர வாகனத்துக்கு விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி நாள்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



