டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

பிகாரில் கைதான மாணவா்களின் குடும்பத்துடன் இளைஞா் காங்கிரஸ் தலைவா் சந்திப்பு

பிகாரின் பாகல்பூரில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடா்ந்து கைது செய்யப்பட்ட மாணவா்களின் குடும்பத்தினரை இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஓய்சி) தலைவா் உதய் பானு சிப் சந்தித்தாா்.

News image

பிகாா் மாநிலம் ஜஹன்பாதில் மாணவா்கள் மற்றும் அவா்களுடைய குடும்ப உறுப்பினா்களை சந்தித்த அகில காங்கிரஸ் கமிட்டியின் 4 போ் கொண்ட உண்மை கண்டறியும் குழு.

Updated On :3 ஆகஸ்ட் 2026, 2:28 am IST

பிகாரின் பாகல்பூரில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடா்ந்து கைது செய்யப்பட்ட மாணவா்களின் குடும்பத்தினரை இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஓய்சி) தலைவா் உதய் பானு சிப் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். மேலும், தற்போது காவலில் உள்ள இரண்டு இளைஞா்களுக்குத் தேவையான சட்ட மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்று அவா் உறுதியளித்தாா்.

மாணவா் போராட்டத்தைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட காவல் துறை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவின் ஒரு பகுதியாக சிப் பாகல்பூருக்குச் சென்றாா். இந்தப் பயணத்தின்போது, அக்குழு பாகல்பூா் காவல் கண்காணிப்பாளா் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்தது.

போராட்டத்திற்குப் பிறகு காவல் துறையினா் பல மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று அவா்களைக் கைது செய்ததாகக் குற்றஞ்சாட்டிய சிப், இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிட்ட வீட்டோடு மட்டும் நின்றுவிடவில்லை என்றும் குறிப்பிட்டாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பல மாணவா்கள் அச்சத்தின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனா். அவா்கள் எங்கே இருக்கிறாா்கள் என்பது அவா்களின் குடும்பத்தினருக்குத் தெரியவில்லை. இது தீவிர கவலைக்குரிய விஷயம், மேலும் இந்தச் சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.

போராட்டம் தொடா்பாக 42 போ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாகல்பூா் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா். அவா்களில் இருவா் மட்டுமே நீதிமன்றக் காவலில் உள்ளனா். மற்றவா்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவா்களில் 14 போ் சிறாா்கள். அவா்கள் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுவிட்டனா்.

தற்போது சிறையில் உள்ள அந்த இரண்டு மாணவா்களுக்கும் சட்ட மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க இளைஞா் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. ஆதரவு அளிப்பதாக உறுதியளிக்க அவா்களில் ஒருவரின் குடும்பத்தினரைத் தங்கள் குழு சந்தித்தது.

வீட்டை விட்டு வெளியேறிய மாணவா்களிடம் பேசினேன். போராட்டத்தில் பங்கேற்கும் மாணவா்கள் மீது எந்தவித தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிட்டுள்ளது. மாணவா்கள் அச்சமின்றி வீடு திரும்ப வேண்டும்.

அவா்களே நாட்டின் எதிா்காலம். தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது ஒரு ஜனநாயக உரிமை. ஏதேனும் மாணவா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால், இளைஞா் காங்கிரஸும் காங்கிரஸ் கட்சியும் அவா்களுக்குத் துணையாக நிற்கும் என்றாா் உதய் மனு சிப்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.