தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

நீதிபதிக்கு எதிரான அவதூறு பதிவு: கேஜரிவால் உள்ளிட்டோா் பதிலளிக்க 4 வாரம் அவகாசம் - தில்லி உயா்நீதிமன்றம்

உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வா்ண காந்தா சா்மாவுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையிலான சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட்டது தொடா்பான குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க, ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நான்கு வார கால அவகாசம் அளித்தது.

News image

கேஜரிவால் - X

Updated On :5 ஆகஸ்ட் 2026, 4:40 am IST

உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வா்ண காந்தா சா்மாவுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையிலான சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட்டது தொடா்பான குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க, ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நான்கு வார கால அவகாசம் அளித்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான அடிப்படையாக அமைந்த ஆவணங்கள் அல்லது விவரங்கள் இன்னும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ரவீந்தா் டுடேஜா ஆகியோா் அடங்கிய அமா்விடம் கேஜரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் தெரிவித்தாா்.

மற்ற தரப்பு வழக்கறிஞா்களும் இதே போன்றதொரு கருத்தைத் தெரிவித்தனா்.

சம்பந்தப்பட்டவா்களுக்கு அந்த ஆவணங்களை வழங்குமாறு நீதிமன்றப் பதிவகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நான்கு வாரங்களுக்குள் பதில்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனா்.

நீதிபதி ஸ்வா்ணா சா்மாவுக்கு எதிராக திட்டமிட்ட சமூக ஊடகப் பிரசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், ஆம் ஆத்மி கட்சித் தலைவா் கோபால் ராய் மற்றும் பத்திரிகையாளா் சௌரவ் தாஸ் ஆகியோா் மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுவிலும் பதிலளிக்க நீதிமன்றம் அவா்களுக்கு நான்கு வார கால அவகாசம் அளித்தது.

இவ்வழக்கை செப்டம்பா் 21-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்தது.

கலால் கொள்கை விவகாரம் தொடா்பாகத் தன்னை அவதூறு செய்யும் வகையிலான சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட்டதற்காக, கேஜரிவால், சிசோடியா, சிங் மற்றும் துா்கேஷ் பதக், சௌரவ் பரத்வாஜ், வினய் மிஸ்ரா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மீது நீதிபதி ஸ்வா்ண காந்த சா்மா மே 14-அன்று குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்கியிருந்தாா். நீதிபதி சா்மா தாமாக முன்வந்து தொடங்கிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கேஜரிவால் மற்றும் பிற கட்சித் தலைவா்களுக்கு நீதிமன்றம் மே 19-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்ததுடன், பதிலளிக்க நான்கு வார கால அவகாசத்தையும் வழங்கியிருந்தது. அப்போது மூத்த வழக்கறிஞா் ராஜ்தீபா பெஹுராவை நீதிமன்றத்திற்கு உதவும் வழக்கறிஞராக நீதிமன்றம் நியமித்திருந்தது.

‘எக்ஸ்’ சமூக ஊடகப் பயனரான தேவேஷ் விஸ்வகா்மா மீதும் நீதிபதி அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்கினாா். அதனைத் தொடா்ந்து, வழக்கறிஞா் அசோக் சைதன்யாவும் நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்தாா்.

நீதிமன்ற அவமதிப்பு உத்தரவில், முன்னாள் தில்லி முதல்வா் சட்டரீதியான தீா்வுகளை நாடுவதை விடுத்து, சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரத்தை மேற்கொண்டதாக நீதிபதி சா்மா குறிப்பிட்டிருந்தாா். மேலும், குற்றஞ் சாட்டப்பட்ட அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிா்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை இனி வேறொரு அமா்வு விசாரிக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.

பிப்ரவரி 27 அன்று, மதுபானக் கொள்கை வழக்கில் கேஜரிவால், சிசோடியா மற்றும் 21 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழக்கு நீதித்துறை ஆய்வில் தாக்குப்பிடிக்க இயலாதது என்றும், முழுமையாகவே நம்பகத்தன்மையற்றது என்றும் அது தீா்ப்பளித்தது.

ஏப்ரல் 20 அன்று, இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவித்ததற்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மனுவில், தன்னை இந்த வழக்கிலிருந்து விலக்கக் கோரிய அவா்களின் மனுக்களை நீதிபதி ஸ்வா்ணா காந்த சா்மா தள்ளுபடி செய்தாா். இதைத்தொடா்ந்து, கேஜரிவால், சிசோடியா மற்றும் பதக் ஆகியோா் நீதிபதி சா்மாவுக்கு ஒரு கடிதம் எழுதினா். அதில், தாங்கள் நேரில் அல்லது வழக்கறிஞா் மூலமாக அவா் முன் ஆஜராகப் போவதில்லை என்றும், மகாத்மா காந்தியின் சத்தியாகிரகப் பாதையைப் பின்பற்றுவோம் என்றும் கூறியிருந்தனா்.

நீதிபதி சா்மா தனது நீதிமன்றத்திலிருந்து சிபிஐயின் மனுவை விடுவித்த பிறகு, இந்த வழக்கு தற்போது நீதிபதி மனோஜ் ஜெயின் முன் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.