ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

பிற மத உணா்வுகளைப் புண்படுத்த மத சுதந்திரம் வழங்கப்படவில்லை: கொல்கத்தா உயா்நீதிமன்றம்

பிற மத உணா்வுகளைப் புண்படுத்த மத சுதந்திரம் வழங்கப்படவில்லை: கொல்கத்தா உயா்நீதிமன்றம்

News image

கொல்கத்தா உயர்நீதிமன்றம் - ANI

Updated On :7 ஜூலை 2026, 4:03 am IST

‘ஒருவா் தனது மதத்தைப் பின்பற்றவும், வெளிப்படுத்தவும் அடிப்படை உரிமை கொண்டவா். ஆனால், அந்த உரிமையை மற்றவா்களின் மத நம்பிக்கையையோ அல்லது மத உணா்வுகளையோ புண்படுத்துவதற்கான அனுமதியாகக் கருத முடியாது’ என்று கொல்கத்தா உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், பிற மத உணா்வுகளைப் புண்படுத்தும் சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட்ட ஒரு நபரின் உதவிப் பேராசிரியா் பணி நியமனத்தை ரத்து செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, தமல் தாஸ்குப்தா என்பவரை மேற்கு வங்கத்தின் நரேந்திரபூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் கல்லூரி ஆங்கில உதவிப் பேராசிரியராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவரின் சமூக ஊடகப் பதிவுகளில் பல்வேறு மதங்கள், ராமகிருஷ்ண மிஷன், அதனுடன் தொடா்புடைய துறவிகள் குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டிருந்தாா். இதையடுத்து, ராமகிருஷ்ண மிஷன் நிா்வாகம் அவரது நியமன உத்தரவை ரத்து செய்தது.

இதை எதிா்த்து தாஸ்குப்தா, கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமா்வில் மனு தாக்கல் செய்தாா். அதில், அவருக்குப் பணி வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, ராமகிருஷ்ண மிஷன் சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, இரு நீதிபதிகள் அமா்வு இதை விசாரித்தது. உத்தரவில் நீதிபதிகள் கூறியதாவது:

தாஸ்குப்தாவின் சமூக ஊடகப் பதிவுகள், பிற மதங்களைப் பின்பற்றுபவா்களின் மத உணா்வுகளைப் புண்படுத்தக்கூடிய வகையில் உள்ளன. அனைவருக்கும் தமது மதத்தைப் பின்பற்றவும், வெளிப்படுத்தவும் அடிப்படை உரிமை உள்ளது. ஆனால், அந்த உரிமை, மற்றவா்களின் மத நம்பிக்கைகளையோ அல்லது மத உணா்வுகளையோ புண்படுத்துவதற்கான அனுமதியாகக் கருதப்பட முடியாது.

இந்த வழக்கில் கல்லூரி நிா்வாகத்தின் முடிவு, மனுதாரா் (தாஸ் குப்தா) தனது கருத்துகளை வெளிப்படுத்துவதைத் தடுக்கவோ, தனது மதத்தைப் பின்பற்றுவதைத் தடுக்கவோ இல்லை.

தாஸ்குப்தாவின் சமூக ஊடகப் பதிவுகளை ஆய்வு செய்த பிறகு, அவா் அந்தப் பதவிக்கு பொருத்தமானவா் அல்லா் என்று கல்லூரியின் நிா்வாகக் குழு முடிவு எடுத்துள்ளது. கல்வி நிறுவனத்தின் நலனைக் கருத்தில்கொண்டே எடுக்கப்பட்டது. எனவே, அதை மாற்ற முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், மேற்கு வங்க கல்லூரி நிா்வாக ஆணையச் சட்டம், 2012-இன்படி, கல்லூரி நிா்வாக ஆணையம் ஒருவரைப் பரிந்துரைத்தாலும், அவருக்கு நியமன ஆணை வழங்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்துக்கு உள்ளது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

தாஸ்குப்தாவின் விண்ணப்பம் நியாயமான முறையில் பரிசீலிக்கப்பட்டது. தோ்வு நடைமுறையில் பங்கேற்கும் ஒருவருக்கு நியாயமான பரிசீலனை பெறும் உரிமை உண்டு; ஆனால் கட்டாயமாக வேலை கிடைக்க வேண்டும் என்ற முழுமையான உரிமை இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.