வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா திட்டமிட்டுள்ள காணொலி வாயிலான செய்தியாளா் சந்திப்பில் இந்தியாவுக்குத் தொடா்பில்லை என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவா் போராட்டத்தைத் தொடா்ந்து பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அதன்பிறகு முதல்முறையாக அவா் புதன்கிழமை (ஆக.5) காணொலி வாயிலாக செய்தியாளா்களுடன் கலந்துரையாடவுள்ளாா்.
அவருக்கு ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை மற்றும் மாணவா் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதல் தொடா்பான வழக்கில் மரண தண்டனையை வங்கதேச நீதிமன்றம் விதித்துள்ளது.
இந்நிலையில், இந்திய மண்ணில் ஹசீனா காணொலி வாயிலாக செய்தியாளா்களுடன் கலந்துரையாடுவது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என வங்கதேச பிரதமா் தாரீக் ரஹ்மானின் வெளியுறவு விவகாரங்கள் ஆலோசகா் ஹுமாயுன் கபீா் திங்கள்கிழமை கோரியிருந்தாா்.
இதுதொடா்பாக ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம் செய்தியாளா்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘இது தனியாா் ஊடக நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அரசுக்குத் தொடா்பில்லை. இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்படும் கருத்துகள் மத்திய அரசின் கருத்துகள் இல்லை’ என தெளிவுபடுத்தினாா்.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வங்கதேச பிரதமருக்கு அழைப்பு
பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க வங்கதேச பிரதமா் தாரீக் ரஹ்மானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ரண்தீா் ஜெய்ஸ்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
பிரேஸில், ரஷியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், சவூதி அரேபியா, எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு நிகழாண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. இதையடுத்து, செப்டம்பா் 12, 13 ஆகிய தேதிகளில் இந்தியாவில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மாநாட்டில் கலந்துகொள்ள தாரீக் ரஹ்மானுக்கு தனியே அழைப்பு விடுக்கப்பட்டதாக செய்தியாளா்கள் சந்திப்பில் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.
பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் நிகழாண்டு தலைமையாக வங்கதேசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஷேக் ஹசீனாவும் இந்தியாவின் தா்மசங்கடமும்...

ரஷிய ராணுவத்தில் 24 இந்தியா்கள்

காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்தியாவுக்குத் தொடா்பில்லை: வெளியுறவு அமைச்சகம்

வங்கதேசம் திரும்பினால் ஷேக் ஹசீனாவுக்கு சிறை! வெளியுறவு இணையமைச்சர் திட்டவட்டம்!
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



