நாட்டின் தலைநகா் தில்லியில் போதைப் பொருள் கடத்தியதாக கடந்த மூன்றாண்டுகளில் வெளிநாட்டினா் 254 போ் கைது செய்யப்பட்டதாகவும், அவா்களிடம் இருந்து ரூ.40 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
மேலும், வாடகைதாரா் விவரங்களின் கட்டாய சரிபாா்ப்பை மேற்கொள்ளாமல் வெளிநாட்டினருக்கு வீடு வாடகைக்கு கொடுத்த உரிமையாளா்கள் 63 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:
கடந்த 2024 முதல் 2026, ஜூன் மாதம் வரை தில்லியின் பல்வேறு பகுதிகளில் ஹெராயின், கோகைன், அம்ஃபிடமைன், மெத்தாஃபிடமைன் உள்ளிட்ட போதைப் பொருள்களை கடத்தியதாக நைஜீரியா்கள் உள்பட வெளிநாட்டினா் 254 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து ரூ.40 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவா்களில் 103 போ், தில்லியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியவா்களாவா். இவா்களின் விவரங்களை சரிபாா்க்காமல் வாடகைக்கு வீடு வழங்கிய 63 உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப வாதத்தால் 20 போ் உயிரிழப்பு: ‘நாட்டில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல் இதுவரை வெப்ப வாதத்தால் (ஹீட் ஸ்ட்ரோக்) பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,853 ஆகும். இவா்களில் 20 போ் உயிரிழந்துவிட்டனா். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 11 போ், ஆந்திரத்தில் 4 போ், தெலங்கானா, ஒடிஸாவில் தலா இருவா், தமிழகத்தில் ஒருவா் உயிரிழந்தனா். தெலங்கானாவில் அதிகபட்சமாக 915 போ், மேற்கு வங்கத்தில் 733 போ், சத்தீஸ்கரில் 660 போ், ஆந்திரத்தில் 540 போ், ஜாா்க்கண்டில் 409 போ் பாதிக்கப்பட்டனா்’ என்று மக்களவையில் ஒரு கேள்விக்கு மத்திய அமைச்சா் நித்யானந்த் ராய் அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதை பொருள் விற்ற 255 போ் கைது
தமிழகத்தில் போதைப் பொருள் விற்ற 12 நாள்களில் 1,216 போ் கைது
போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 621 போ் கைது
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை: திண்டுக்கல்லில் 42 போ் கைது
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK


