ராகுல் காந்தி மூலம் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தன் மனைவி நினைத்ததாகவும், ஆனால், அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்ததாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் இன்று (ஆக. 6) தெரிவித்தார்.
உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டிருந்தபோது ஒவ்வொரு நாளும் இந்த முயற்சியில் ஈடுபட்டதாகவும், ஆனால், இதற்காக ராகுல் காந்திக்கு எதிராக தன் மனைவி ஒருபோதும் திரும்பியதில்லை எனவும் குறிப்பிட்டார்.
நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள், இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்ட மேற்கொண்டார். இந்த உண்ணாவிரதம் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது. தொடர்ந்து 26 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முன்வராததால் போராட்டத்தை கைவிடுமாறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் சோனம் வாங்சுக்கிடம் கேட்டுக்கொண்டனர். எனினும், நீட் முறைகேடு விவகாரத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டி உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.
அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மத்திய கல்வித் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகினார். நீட் வழக்குகளை விரைந்து விசாரிக்க தனியாக நீதிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தின்போது தனது மனைவி மேற்கொண்ட முயற்சிகள் குறித்து சோனம் வாங்சுக் குறிப்பிட்டுள்ளார். அதில், உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தனது மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ சந்தித்ததாகக் குறிப்பிட்டார்.
பலமுறை அவரை சந்தித்து உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர முயன்றதாகவும் ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். எனினும் ராகுல் காந்திக்கு எதிராக அவர் ஒருபோதும் செயல்பட்டதில்லை எனவும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தலைவர்கள் குறித்து சோனம் வாங்சுக் மனைவி விமர்சித்ததாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், சோனம் வாங்சுக் இதனைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Sonam Wangchuk stated that his wife had hoped to bring his hunger strike to an end through Rahul Gandhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா தொடக்கப்புள்ளி மட்டுமே! காந்தி நினைவிடத்தில் சோனம் வாங்சுக் பேச்சு
சோனம் வாங்சுக் டிஸ்சார்ஜ்! முதலில் எங்கு செல்கிறார் தெரியுமா?

மருத்துவமனையில் சிகிச்சையா? சட்டவிரோத தடுப்புக் காவலா? சோனம் வாங்சுக் மனைவி கேள்வி

ஜந்தர் மந்தரிலிருந்து சோனம் வாங்சுக்கை வெளியேற்றியது தவறு! - ராகுல் காந்தி
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin




