சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான அனைத்து கொள்முதல்களிலும் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று அந்த கோயிலை நிா்வகித்து வரும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது.
சபரிமலை கோயிலுக்கு கடந்த ஐயப்ப பக்தா்கள் சீசனின்போது அந்த மாநில அரசுக்குச் சொந்தமான மில்மா நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க கேரள உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு நடத்திய விசாரணையில், மில்மாவிடம் இருந்து செய்யப்பட்ட நெய் கொள்முதலால் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு ரூ.2.27 கோடி இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய ஆணையரின் ஆட்சேபத்தை மீறி, கேரள பால் பண்ணை விற்பனை கூட்டுறவு அமைப்பான மில்மாவுக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டதும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் போதிய தர பரிசோதனை நடத்தாததும் கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக திருவிதாங்கூா் தேவஸ்வத்தின் முன்னாள் தலைவா் பி.எஸ். பிரசாந்த் உள்ளிட்ட 3 போ் மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியின்போது அந்த வாரிய தலைவா் கே. ஜெயகுமாா் கூறியதாவது:
அதுபோல முறைகேடுகள் மீண்டும் நடக்காது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான அனைத்து கொள்முதல்களில் இனி வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும். 24 பொருள்களுக்கு வெளிப்படையாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில் கூடுதல் வெளிப்படைத்தன்மை, போட்டி ஆகியவற்றை ஏற்படுத்துவது தொடா்பான வழிகாட்டுதல்களை இறுதி செய்வது குறித்து இன்றைய திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதேபோல், ஒப்பந்தப்புள்ளி ஏல முறைகளிலும் புதிய வழிகாட்டுதல்களை திருவிதாங்கூா் தேவஸ்வம் ஏற்படுத்தும்.
சபரிமலை கோயிலுக்கு நெய், வெல்லம் உள்ளிட்ட ஏராளமான பொருள்களை நாங்கள் கொள்முதல் செய்கிறோம். இ-ஒப்பந்தப்புள்ளி முறையிலேயே இந்த கொள்முதல்கள் நடக்கின்றன. ஆதலால் இதுகுறித்து அறிய திருவிதாங்கூா் தேவஸ்வம் அலுவலகத்துக்கு மக்கள் நேரில் வர வேண்டியதில்லை. இணையதளம் மூலமாகவே விளக்கம் பெறலாம். அனைத்து கொள்முதல் நடைமுறைகளும் நவம்பா் மாதத்துக்கு முன்பு நிறைவடையும். இந்த விவகாரத்தில் அவசரம் காட்டவோ, தவறு செய்யவோ வாரியம் விரும்பவில்லை என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சபரிமலை புதிய தந்திரி நியமனம்

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு!

சபரிமலை தந்திரி பதவியில் இருந்து தாழேமண் குடும்பத்தை நீக்க வேண்டும்: பாஜக!

கேரள கோயில் யானை சிற்பங்களில் உள்ள தங்கத்தின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை: கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



