மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலையீடு காணப்படுவதாக பிரதமர் மோடியை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக கேஜரிவாலின் எக்ஸ் தளப் பதிவில்,
ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது உக்ரைன் போருக்குத் துணை புரிகிறது என்று கூறி, இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் மீது 100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்க அனுமதிக்கும் மசோதாவை அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியுள்ளது.
இதைத் தொடர்ந்து, அரசின் ஒவ்வொரு முடிவிலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலையீடு காணப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
அமெரிக்க மசோதா குறித்த செய்தி ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். நாட்டை அமெரிக்காவிடம் அடகு வைத்து, டிரம்பின் அடிமைத்தனத்திற்கு அடிபணிந்து, இந்தியாவை அவமானப்படுத்திய பிறகு, மோடி நாட்டிற்கு இதைக் கொண்டு வந்துள்ளார்.
இன்று, நாட்டின் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய முடிவிலும் டிரம்பின் தலையீடு உள்ளது. சரி அல்லது தவறு எதுவாக இருந்தாலும், டிரம்ப் சொல்வதற்கெல்லாம் மோடி ஒப்புக்கொள்கிறார். ஆனால் டிரம்ப் ஒவ்வொரு துறையிலும் இந்தியாவுக்கு எதிரான முடிவுகளையே எடுக்கிறார். இவ்வாறு அவர் ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.
சமீப காலங்களில், எத்தனால் கலப்பு விவகாரத்திலும் கேஜரிவால் மத்திய அரசை விமர்சித்து வருகிறார். உபரியாக உள்ள அமெரிக்க எத்தனாலுக்குச் சந்தையை உருவாக்கும் நோக்கிலேயே 'இ20' கொள்கை கொண்டுவரப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்தாமலோ அல்லது தற்போதுள்ள வாகனங்கள் அதிக எத்தனால் கலப்புக்கு ஏற்றவைதானா என்பதை உறுதிப்படுத்தாமலோ மத்திய அரசு 'இ20' கொள்கையை வலுக்கட்டாயமாக அமல்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
Aam Aadmi Party national convenor Arvind Kejriwal on Saturday slammed Prime Minister Narendra Modi alleging that US President Donald Trump's interference can be seen in every decision taken by the government.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாக்குதல் நடத்தவேண்டாம் என அமெரிக்காவிடம் கேட்கவில்லை: டிரம்ப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு!
ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு
உலகம் யார் பக்கம்?

ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



