FOLLOW US

ON GOOGLE DISCOVER

மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

பெங்களூருக்கு மேக்கேதாட்டு தேவையே இல்லை! கர்நாடக அணையில் பயன்படுத்தாமல் கிடக்கும் தண்ணீர்!

திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து சுமார் 2.2 டி.எம்.சி நீர் வீணாகுவது குறித்து...

News image

திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்தின் காட்சி. - படம்: TNIE

Updated On :9 ஆகஸ்ட் 2026, 1:35 pm IST

பெங்களூரிலிருந்து மகாடி சாலையில் சுமார் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, 1933-ல் முதல்முதலாக மனிதனால் கட்டப்பட்ட அணையான திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து சுமார் 2.2 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வீணாக்கி வருகிறது.

பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் அதிகாரி கூறுகையில், ”தற்போது நீர்த்தேக்கத்தில் 58 அடி உயரத்திற்கு சுமார் 2.2 டிஎம்சி தண்ணீர் உள்ளது. ஆனால், இந்த நீர் முறையாகப் பயன்படுத்தப்படாமல் தேங்கிக் கிடக்கிறது.

அண்மையில் ரூ. 230 கோடி செலவில் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட இயந்திரங்கள் வீணாகிவிடக் கூடாது என்பதற்காக, நாள்தோறும் 4 மில்லியன் லிட்டர் (MLD) குடிநீரை, கீழ்ப்பகுதியில் உள்ள மஞ்சனபெலே அணை மற்றும் மகடி கிராமங்களுக்கு அனுப்புகிறோம்.

மீதமுள்ள தண்ணீர் அப்படியே தேங்கி நிற்பதால், ஆவியாதல் மற்றும் கசிவு மூலம் வீணாகிறது. இருப்பினும், நல்ல விஷயம் என்னவென்றால், இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாக இருக்கிறது, விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்று பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய பொறியாளர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “ஏற்கனவே இருக்கும் இந்த நீர்நிலை புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூருக்கு மேக்கேதாட்டு திட்டத்தின் மூலம் கிடைக்கும் 4 டிஎம்சி தண்ணீர் தேவையில்லை. மேலும், மேக்கேதாட்டு திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையில், பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு, குழாய் அமைப்பது சேர்க்கப்படவில்லை.

ஆனால், திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்தைப் பொறுத்தவரை, ஏற்கனவே தண்ணீர் கொண்டு வருவதற்கான குழாய் இணைப்பு ஒன்று உள்ளது. அந்தக் குழாயும் அண்மையில் பழுதுபார்க்கப்பட்டது.

இந்திய அறிவியல் கழகத்தின் ஆலோசனையின் அடிப்படையில், தண்ணீரை சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்துவதற்காக கூடுதல் ஓசோனேஷன்(ozonisation) சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. 2024-ஆம் ஆண்டு சோதனை அடிப்படையில் திப்பகொண்டனஹள்ளி நீரானது, பெங்களூருக்கு விநியோகிக்கப்பட்டது. ஆனால், கர்நாடக அரசு உத்தரவின் பேரில் அந்த விநியோகம் நிறுத்தப்பட்டது” என்று அந்த அதிகாரி கூறினார்.

திப்பகொண்டனஹள்ளி நீர் தரமானது; பயன்பாட்டிற்கு ஏற்றது

திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கம் 74 அடி வரை நீரைச் சேமிக்கும் திறன் கொண்டது. இதன் நீர் பரப்பளவு 2,300 ஏக்கராகவும், மொத்தப் பரப்பளவு 2,700 ஏக்கராகவும் உள்ளது.

இருப்பினும், அரசும் பொதுமக்களும் இந்த நீர்த்தேக்கத்தின் நீரை நம்புவதில்லை. மழைநீரைத் தவிர, திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்திற்கு ஆர்காவதி ஆறு மற்றும் ஹெசரகட்டாவிலிருந்து நீர் வருகிறது.

காவிரி நீர் சுத்திகரிக்கப்பட்டு குளோரின் கலக்கப்படும் நிலையில், திப்பகொண்டனஹள்ளி நீர் கூடுதலாக ஓசோனேஷன் செயல்பாட்டிற்கு உள்படுத்தப்படுகிறது.

ஆர்காவதியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட 35 எம்எல்டி தண்ணீர் திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்துக்கு பாய்கிறது. இதனிடையே, பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், இந்த நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை மீட்டெடுப்பது தொடர்பான அறிக்கையை தயாரித்து வருகிறது.

நாள்தோறும் திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து 1,940 எம்எல்டி காவிரி நீர், பெங்களூருக்கு விநியோகிக்கப்படுகிறது.

திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்தின் தண்ணீர் தரமானது; குடிநீராகப் பயன்படுத்துவதற்கு ஏற்றது. இருந்தபோதிலும், அது நாள்தோறும் வீணடிக்கப்படுகிறது. ஏத்தினஹொளே திட்டம் பெங்களூரை வந்தடையும் போது திப்பகொண்டனஹள்ளி நீரைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், அந்தத் திட்டம் தாமதமாகி வருகிறது.

திப்பகொண்டனஹள்ளி நீரைப் பயன்படுத்துவதற்காக, டொப்பாஸ்பேட் மற்றும் பீன்யா தொழிற்பேட்டை பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்திய அறிவியல் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.வி. ராமச்சந்திரா கூறுகையில், பெங்களூருக்குப் போதுமான மழைப்பொழிவு கிடைப்பதால், இந்த நகரத்துக்கு மேக்கேதாட்டு திட்டம் தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.

பெங்களூருக்கு போதுமான அளவு காவிரி நீர் கிடைப்பதோடு, அதற்கு இணையான அளவில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும் கிடைக்கிறது, இவை அனைத்தையும் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

Summary

Bangalore Water Supply and Sewerage Board (BWSSB) officials said the reservoir has 2.2 tmcft of water standing at 58 feet, which has been ignored and not utilised.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.