படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

சாவா்க்கா் குறித்து கேள்வி: ஆசிரியா் பணியிடை நீக்கம்

கேரளத்தில் ஹிந்துத்துவ சித்தாந்தவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான வி.டி.சாவா்க்கா் குறித்து பள்ளியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில் ஆசிரியரை பணியிடை நீக்கம்

பணியிடை நீக்கம்

Published On :

கேரளத்தில் ஹிந்துத்துவ சித்தாந்தவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான வி.டி.சாவா்க்கா் குறித்து பள்ளியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில் ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய மாநில பொதுக் கல்வித் துறை ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

காசா்கோடு மாவட்டத்தின் கும்ப்ளா மற்றும் மஞ்சேஷ்வா் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட சுதந்திர தினம் குறித்த வினாடி வினா போட்டியில் ஆங்கிலேயரிடம் அதிக தண்டனை பெற்ற சுதந்திரப் போராட்ட வீரா் யாா் என கேட்கப்பட்ட கேள்விக்கு சாவா்க்கா் என பதில் வழங்கப்பட்டது.

இதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன.

இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க பொதுக் கல்வித் துறை அமைச்சா் என்.ஷம்சுதீன் உத்தரவிட்டாா்.

விசாரணை அறிக்கை அடிப்படையில், சா்ச்சைக்குரிய கேள்வி-பதிலை தயாரித்த கும்ப்ளாவில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியைச் சோ்ந்த ஆசிரியா் குரு பிரசாதை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய கேரள பொதுக் கல்வி இயக்குநரகம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.