புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

சுத்தமான பெட்ரோல் உன் அப்பா வீட்டிலிருந்து வருமா? பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு!

பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா எத்தனால் கலந்த பெட்ரோலை எதிர்ப்பவர்களை விமர்சித்துப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா

Published On :

சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக அறியப்பட்ட பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா, எத்தனால் கலந்த பெட்ரோலை எதிர்ப்பவர்களை விமர்சித்துப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் ரேவா விமான நிலையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய ஜனார்தன் மிஸ்ரா, "எத்தனால் கலந்த பெட்ரோலை எதிர்ப்பவர்கள், சுத்தமான பெட்ரோல் மட்டுமே வேண்டும் என்று கேட்கின்றனர். நம் நாட்டில் சுத்தமான பெட்ரோலே இல்லாதபோது, ​​அது எங்கிருந்து வரும்? உங்களின் அப்பா வீட்டிலிருந்து வருமா?" என்று கூறினார்.

"உலகிலேயே பிரேசில்தான் அதிக எத்தனால் உற்பத்தி செய்கிறது. அங்குள்ள கார்கள் 100% எத்தனாலில்தான் இயங்குகின்றன. ஆனாலும் அங்கு வாகனங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. வாகனத் துறை வல்லுநர்களும் கார் மெக்கானிக்குகளும் கூட எத்தனால் கார் இன்ஜின்களைப் பாதிக்காது என்று உறுதியாக நம்புகிறார்கள். ஆனாலும் நம் நாட்டில் அதனைத் தேவையின்றி எதிர்க்கின்றனர்.

உலகளாவிய போர்ச் சூழல் காரணமாக, எண்ணெய் விநியோகத்திற்காக தற்போது கப்பல்கள் கூடுதலாக 18,000 கி.மீ. பயணிக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற சூழலில், பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பது பற்றி பிரதமர் மோடி பேசுகையில் சில எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்” என்று அவர் பேசினார்.

மிஸ்ரா சர்ச்சையாகப் பேசுவது புதிதல்ல. முன்னதாக, 2019 செப்டம்பரில் அப்போதைய ரேவா மாநகராட்சி ஆணையர் சபாஜீத் யாதவைப் பற்றிப் பேசுகையில், அவர் பணம் கேட்டு வந்தால் உயிருடன் குழி தோண்டி புதைக்குமாறுப் பேசியிருந்தார்.

2021 நவம்பரில், பிரதமர் நரேந்திர மோடியின் தாடியிலிருந்து வீடுகள் வெளிவருகின்றன என்றும், மோடியின் தாடி இருக்கும் வரை லட்சக்கணக்கான மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

2021 டிசம்பரில், ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் ​​ஒரு கிராம பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கணிசமான தொகையை செலவிடுவதால் அவர்கள் 15 லட்சம் ரூபாய் வரை ஊழல் செய்தால் மக்கள் தன்னிடம் புகாரளிக்கக் கூடாது என வித்தியாசமாக அறிவுரை வழங்கினார்.

இதுபோன்று பலமுறை அவர் சர்ச்சையாகப் பேசி எதிர்ப்புகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

BJP MP Janardan Mishra has sparked controversy with his remarks criticizing those who oppose ethanol-blended petrol.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.