நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் தொடர்ந்து நான்காவது வாரமாக இரு அவைகளும் முடங்கியுள்ளன.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் நான்காவது வாரத்தின் முதல் நாளான இன்று காலை வளாகத்துக்கு வந்த பிரியங்கா காந்தி செய்தியாளர்களுடன் பேசுகையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கம் கிடைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்றார்.
இந்த நிலையில், மக்களவை கூட்டத்தொடர் இன்று காலை கூடியவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், பகல் 12 மணிவரை அவை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.
பகல் 12 மணியளவில் மீண்டும் அவை கூடியவுடன் அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு முழக்கமிட்டதால் சிறிது நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
வருகின்ற ஆகஸ்ட் 13 ஆம் தேதியுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Parliament stalled for the fourth consecutive week!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி நன்கொடை திருட்டு விவகாரம்! எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

நாடாளுமன்றம் வர தைரியமில்லாத உள்துறை அமைச்சர் ராகுல்காந்தி பேச்சு
தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!

ராஜிநாமாவுக்குப் பின் நாடாளுமன்றம் வரும் தர்மேந்திர பிரதான்! எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! பேரவையில் முதல்வர் Vijay பேச்சு! | TN Assembly | TVK



