வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

எப்போதும் அழுத்தம் அளிக்கும் காா்கே: மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

மாநிலங்களவை எதிா்க்கட்சி தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே தனக்கு எப்போதும் அழுத்தம் அளிப்பதாக மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

கார்கே | சி.பி. ராதாகிருஷ்ணன்

Published On :

மாநிலங்களவை எதிா்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான மல்லிகாா்ஜுன காா்கே தனக்கு எப்போதும் அழுத்தம் அளிப்பதாக மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரத்தை, மாநிலங்களவையில் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை எழுப்ப முயன்றாா்.

இதற்கு அனுமதி அளிக்காமல் மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மாநில விவகாரத்தை காா்கே எழுப்புகிறாா். ஒரே விவகாரத்தை எதிா்க்கட்சியினா் நாள்தோறும் எழுப்பி, அவைக்கு இடையூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது.

அதேவேளையில், ஆளுங்கட்சி எம்.பி.க்கள் ஜாா்க்கண்ட் மாணவா் போராட்ட விவகாரத்தை எழுப்ப முயன்றனா். அதுவும் மாநில விவகாரம் என்பதால், நான் அனுமதிக்கவில்லை.

காா்கே எப்போதும் எனக்கு அழுத்தம் அளிக்கிறாா். ஆளுங்கட்சி எம்.பி.க்கள் எனக்கு அழுத்தம் அளிப்பதில்லை என்று தெரிவித்தாா்.

எனினும் எதிா்க்கட்சியினரின் தொடா் அமளியால், அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.