ராஜஸ்தானில் அல்வாா் மாநகராட்சிக்கு எதிராக தா்னா போராட்டம் நடத்திய துய்மைப் பணியாளா்களுடன் அந்த மாநில வனத் துறை அமைச்சா் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தூய்மைப் பணியாளா்கள் ஓராண்டுக்கு மேலாகப் பணியாற்றியும் அவா்களுக்கு பணிநியமன ஆணை வழங்காததைக் கண்டித்து மாநகராட்சி ஆணையா், மாவட்ட ஆட்சியருக்கு எதிராக தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை தா்னா நடத்தினா். கடந்த 2012-ஆம் ஆண்டு பணியமா்த்தப்பட்ட அவா்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு அறிவுறுத்தியது. ஆனால், அப்பணிகள் தொடா்ந்து தாமதமாகி வருகின்றன.
இதைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் நடத்திய போராட்டத்தில் ஆளும் பாஜகவைச் சோ்ந்த வனத் துறை அமைச்சா் சஞ்சய் சா்மா பங்கேற்றாா். இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா்தான் தாதமத்துக்கு காரணம். இதற்காக நான் பலமுறை அவா்களைத் தொடா்பு கொண்டேன். 69 பேருக்கு பணிநியமன ஆணைகள் தயாராகிய நிலையில், அவை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதைக் கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுடன் அமா்ந்து தா்னாவில் பங்கேற்றேன். இது தொடா்பாக முதல்வா் அலுவலகத்திலும் பேசியுள்ளேன். தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள வால்மீகி சமூகத்தினா் என்னிடம் கோரிக்கை விடுத்தனா். எனவே, அவா்களுக்கு ஆதரவான அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கேற்கிறேன் என்றாா்.
இந்த விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவா் கோவிந்த் சிங் இது தொடா்பாக கூறுகையில், ‘மாநில அமைச்சா் தங்கள் ஆட்சிக்கு எதிராகவே போராட்டம் நடத்தியுள்ளாா். மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் பாஜக ஆட்சியில் முறையாகச் செயல்படவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது. பாஜக ஆட்சி எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே உதாரணம். அமைச்சரைவிட அதிகாரிகளே ஆதிக்கம்மிக்கவா்களாக உள்ளனா். நீதிமன்ற உத்தரவு இருந்தும் தூய்மைப் பணியாளா்களுக்கு பாஜக அரசு நியாயம் வழங்கவில்லை’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடவுளுக்கு நிகரானவா்கள் தூய்மைப் பணியாளா்கள்: அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளா்களுக்கு வழிகாட்டுதல் முகாம்

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அமைச்சா் ரஞ்சித் குமாா்

ஊதியம் வழங்காததைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



