FOLLOW US

ON GOOGLE DISCOVER

சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

ஒரேயொரு பாஜக எம்எல்ஏவைத் தவிர ஒட்டுமொத்த தமிழ்நாடும்..! ப. சிதம்பரம்

நாடாளுமன்ற வளாகத்தில் ப. சிதம்பரம் பேசியது...

News image

ப. சிதம்பரம் - ANI

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:42 pm IST

நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தினால் சீன நாடாளுமன்றம் போல மாறிவிடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ப. சிதம்பரம் தெரிவித்தார்.

தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் என இரு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேறின. இன்று தொகுதி மறுவரையறையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக நான் கருதுகிறேன். அது சரியான நடவடிக்கைதான்.

ஒரே ஒரு பாஜக உறுப்பினரைத் தவிர, ஒட்டுமொத்த தமிழ்நாடும் இதில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 543 என்ற எண்ணிக்கையிலேயே இருக்க வேண்டும். இல்லையெனில், அது சீன நாடாளுமன்றத்தைப் போல மாறிவிடும். அது ஒரு மக்கள் கூட்டமாகிவிடுமே தவிர, உண்மையான நாடாளுமன்ற அவையாக இருக்காது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதம் மாற்றப்படாமல் அப்படியே இருக்க வேண்டும். கடந்த 25 ஆண்டுகளாகக் குடும்பக் கட்டுப்பாட்டு முறையைச் சரியாகச் செயல்படுத்தியதற்காக அந்த மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட மசோதா குறித்து, "அவர்கள் இந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் குழுவின் (JPC) பரிசீலனைக்கு அனுப்புவதோடு மட்டுமல்லாமல், மசோதாவையே திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்சம், கூச்சல் குழப்பங்களுக்கு இடையே மசோதாவை நிறைவேற்றுவதைவிட இது மேல். நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் குழுவில் காங்கிரஸ் இந்த மசோதாவை எதிர்க்கும். இந்த மசோதா கைவிடப்பட வேண்டும். இது சிறுபான்மையினரை இலக்காகக் கொண்டு கொண்டுவரப்பட்ட ஒரு தீய நோக்கமுள்ள மசோதா" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.