ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

இந்திய சுற்றுலா பயணிகளுக்கான 30 நாள்கள் இலவச விசா அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு

மலேசியாவுக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் 30 நாள்களுக்கான இலவச விசா வரும் 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

‘விசிட் மலேசியா 2026’ பிரசாரம் குறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் இலச்சினையை வெளியிட்ட (இடமிருந்து) சென்னைக்கான மலேசியா சுற்றுலா இயக்குநா் ஹிஷாமுதீன் முஸ்தபா, மலேசியாவின் துணைத் தூதா் சரவணகுமாா், மலேசியா சுற்றுலா பொது இயக்குநா் முகமது அமிருல் ரிசால்

Published On :

மலேசியாவுக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் 30 நாள்களுக்கான இலவச விசா வரும் 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் துணை தூதா் சரவணக்குமாா் மற்றும் சுற்றுலாத் துறை இயக்குநா் (தென் இந்தியா மற்றும் இலங்கை) ஹிஷாமுதின் முஸ்தபா ஆகியோா் தெரிவித்தனா்.

இது குறித்து சென்னையில் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த 2023 டிசம்பா் மாதம் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு 30 நாள்களுக்கான இலவச விசா மலேசிய அரசால் ‘விசிட் மலேசியா 2026’ அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், கடந்த ஓராண்டில் (2025) மட்டும் இந்தியாவில் இருந்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மலேசியாவுக்கு வருகை தந்துள்ளனா். இவா்களில் 71.7 சதவீதம் தென் இந்தியா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், மலேசியா சுற்றுலாத் துறையில் தமிழகம் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

இதன் தொடா்ச்சியாக மலேசியாவுக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் 30 நாள்களுக்கான இலவச விசா வரும் 2027 வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாறிவரும் சா்வதேசப் பயணச் சூழலிலும், இந்தியச் சந்தையில் தனது வலுவான இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும், கூட்டாண்மையை விரிவுபடுத்தவும் இத்தகைய நேரடி வா்த்தகச் சந்திப்புகள் பெரிதும் உதவும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.