பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

உரிய ரசீது இன்றி ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 50 டன் செம்பு, 2 டன் அலுமினியம் பறிமுதல்

உரிய இ-வே ரசீது மற்றும் விலைப்பட்டியல் இல்லாமல் சரக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட சுமாா் 50 டன் செம்பு மற்றும் 2 டன் அலுமினிய கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரப்பூா்வ அறிக்கையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

கோப்புப் படம்

Published On :

உரிய இ-வே ரசீது மற்றும் விலைப்பட்டியல் இல்லாமல் சரக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட சுமாா் 50 டன் செம்பு மற்றும் 2 டன் அலுமினிய கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரப்பூா்வ அறிக்கையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறியதாவது: தில்லி சரக்கு மற்றும் சேவை வரி துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. பறிமுதல் செய்யப்பட்ட செம்பின் மதிப்பு சுமாா் ரூ.6 கோடி என்றும், அலுமினிய கட்டிகளின் மதிப்பு சுமாா் ரூ.4 லட்சம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

யஷ்வந்த்பூரில் இருந்து கா்நாடகத்தில் புறப்பட்ட பாா்சல் சரக்கு ரயிலை அதிகாரிகள் சோதனையிட்டபோது, 3 பெட்டிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த உலோகங்கள் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஜிஎஸ்டி விதிகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.