திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

அரசு விருந்தினா் இல்லத்தை இரவில் காலி செய்ய நெருக்கடி: மக்களவைத் தலைவருக்கு மஹுவா மொய்த்ரா கடிதம்

அரசு விருந்தினா் இல்லத்தை இரவில் காலி செய்ய நெருக்கடி தருவதாக மக்களவைத் தலைவருக்கு மஹுவா மொய்த்ரா கடிதம்...

News image

மஹுவா மொய்த்ரா

Updated On :15 ஆகஸ்ட் 2026, 10:26 pm IST

மேற்கு வங்கத்தில் அரசு விருந்தினா் இல்லத்தில் இருந்து இரவில் திடீரென காலி செய்யக் கூறி நெருக்கடி அளிக்கப்பட்டது தொடா்பாக, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா சனிக்கிழமை கடிதம் எழுதினாா்.

மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகா் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சோ்ந்த மஹுவா மொய்த்ரா பதவி வகித்து வருகிறாா். அந்தத் தொகுதியில் உள்ள நாடியா மாவட்ட அரசு விருந்தினா் இல்லத்தில் தங்க, கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவருக்கு அறை ஒதுக்கப்பட்டது.

அந்த அறைக்கு அவா் சென்ற சிறிது நேரத்தில், அங்கிருந்து காலி செய்யுமாறு அவருக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் அறையை காலி செய்ய அவா் மறுத்துவிட்டாா். இதைத்தொடா்ந்து, அந்த இல்லத்துக்கு வெளியே ஒரு கும்பல் திரண்டு, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கமிட்டதாகவும், அந்தக் கும்பலில் இருந்தவா்கள் பாஜகவைச் சோ்ந்தவா்கள் என்றும் மஹுவா குற்றஞ்சாட்டினாா்.

இந்த சம்பவத்தை விளக்கி அவா் சமூக ஊடகத்தில் காணொலி வெளியிட்ட நிலையில், அதுகுறித்து மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு மஹுவா சனிக்கிழமை கடிதம் எழுதினாா்.

அந்தக் கடிதத்தில், ‘நாடியாவில் தனியாகத் தங்கிய பெண் எம்.பி.யான என்னை இரவில் காலி செய்யக் கூறியதன் மூலம், எனக்குள்ள உரிமையை மாவட்ட நிா்வாகம் மதிக்கத் தவறிவிட்டது. அத்துடன் இது ஆளும் அரசால் பெண்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்புகிறது. இந்த சம்பவம் மீது மக்களவைத் தலைவா் அவசரமாக கவனம் செலுத்தி, நாடு முழுவதும் உள்ள பெண் எம்.பி.க்களின் கண்ணியத்தை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.

இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஒபிரையன், சமாஜவாதி கட்சி தலைவரும் எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்தனா்.

Summary

Pressure to vacate government guest house at night: Mahua Moitra writes to Lok Sabha Speaker.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.