/

6 வது நாளாக சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்! திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா நேரில் ஆதரவு!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா நேரில் ஆதரவு...

News image

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி மற்றும் சோனம் வாங்சுகின் போராட்டத்துக்கு திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா ஆதரவு... - Instagram/CJP

Updated On :3 ஜூலை 2026, 8:20 pm IST

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போரட்டத்துக்கும், சோனம் வாங்சுகின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் திரிணமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் மற்றும் லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இணைந்து 14 நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தில்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், கடந்த ஜூன் 28 அன்று முதல் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். இதனால், அவரது உடல்நிலையில் தொடர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போராட்டம் நடைபெறும் இடத்துக்கு இன்று (ஜூலை 3) நேரில் சென்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே உள்ளிட்ட நிர்வாகிகளையும், சோனம் வாங்சுக்கையும் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் அமராவதி மக்களவை உறுப்பினர் பல்வந்த் பஸ்வந்த் வான்கடே நேரில் சென்று ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Trinamool MP Mahua Moitra has extended her support to the protest by the CJP and Sonam Wangchuk's hunger strike.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.