FOLLOW US

ON GOOGLE DISCOVER

தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

ஹரியாணா தொழிற்சாலைகளில் நாள்தோறும் 5 நிமிட யோகா இடைவேளை அறிமுகம்!

ஹரியாணா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் நாள்தோறும் 5 நிமிட யோகா இடைவேளையை அறிமுகப்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

News image

ஹரியானாவின் பஞ்ச்குலாவில் ஜூன் 21 அன்று நடைபெற்ற மாநில அளவிலான சர்வதேச யோகா தின நிகழ்வின் போது, ​​யோகாசனம் செய்த அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி.

Updated On :17 ஆகஸ்ட் 2026, 7:01 pm IST

ஹரியாணா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் நாள்தோறும் 5 நிமிட யோகா இடைவேளையை அறிமுகப்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு நாள்தோறும் 5 நிமிட யோகா இடைவேளை வழங்கவேண்டும் என முதல்வர் நயாப் சிங் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, ஷிஃப்ட் அடிப்படையில் இயங்கும் தொழிற்சாலைகளில், ஒவ்வொரு ஷிஃப்ட்டிலும் உள்ள 50 தொழிலாளர்களில் குறைந்தது ஒருவருக்கு யோகா அமர்வுகளை வழிநடத்தும் பயிற்சி அளிக்கப்படும் என ஆயுஷ் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சுமிதா மிஸ்ரா தெரிவித்தார்.

தொழிற்சாலைகள் மற்றும் தொழில் சங்கங்களிடையே இதுதொடர்பான வழிகாட்டுதல்களைப் வழங்கவும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இதனைச் செயல்படுத்துவதை உறுதிப்படுத்தவும் ஆயுஷ் துறை சார்பில் தொழில் மற்றும் வர்த்தகத் துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழில் மையத்தின் பொதுச் செயலாளர் ஆயுர்வேத துறை அதிகாரியுடன் இணைந்து யோகா முகாம்கள் மற்றும் பயிற்சி அமர்வுகள் பற்றிய அட்டவணையைத் தயார் செய்வார். ஒவ்வொரு தொழிற்சாலை சார்பாக ஒரு மாதத்திற்கு பயிற்சி தர 1 அல்லது 2 ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் ஒவ்வொரு 50 தொழிலாளர்களுக்கும் குறைந்தது ஒரு பயிற்சி பெற்ற ஒருங்கிணைப்பாளர் இருப்பார்.

பயிற்சி பெற்ற ஊழியர்கள், 'யோகா உதவியாளர்களின்' வழிகாட்டுதலுடன் தங்கள் பணியிடங்களில் யோகா இடைவேளை அமர்வுகளை வழிநடத்துவார்கள்.

5 நிமிட யோகா இடைவேளையில் எளிய யோகாசனங்கள், பிராணயாமம் மற்றும் தியான நுட்பங்கள் ஆகியவை சொல்லித் தரப்படும். இதன்மூலம் ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், கவனத்தை மேம்படுத்தவும், உடல் மற்றும் மன நலனை ஊக்குவிக்கவும் உதவும் விதத்தில் அமர்வுகள் நடத்தப்படவுள்ளது.

இதற்கென தனி மொபைல் செயலி உருவாக்கப்பட்டு, யோகா செயல்முறை விளக்க விடியோக்களை பயன்படுத்த ஊழியர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

அதேபோல, இடைவேளையில் யோகா செய்வது தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே அமையும். வழக்கமான வேலைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், பாதுகாப்பான முறையிலும் இந்த அமர்வுகள் நடத்தப்படுவதை உறுதி செய்ய தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Summary

5-minute daily yoga break introduced in Haryana factories

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.