FOLLOW US

ON GOOGLE DISCOVER

மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்!

பிரசாந்த் கிஷோர் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டது பற்றி...

News image

பிரசாந்த் கிஷோர்

Updated On :9 வினாடிகள் முன்பு

பிகார் சட்டப்பேரவையில் பாங்கிப்பூர் தொகுதி எம்எல்ஏவாக பிரசாந்த் கிஷோர் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

பேரவைத் தலைவர் பிரேம் குமார் முன்னிலையில் அவர் உறுதிமொழி எடுத்து எம்எல்ஏ-வாக பதவியேற்றார். பிகார் மாநிலம், பங்கிபூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த பா.ஜ.க தேசிய தலைவர் நிதின் நபின் கடந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவை எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து இந்த தொகுதிக்கு கடந்த ஜூலை 30ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அபார வெற்றி பெற்றார். பிரசாந்த் கிஷோரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹா 44,700 வாக்குகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பிகாரின் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வேட்பாளர் ரேகா குமாரி வெறும் 14,241 வாக்குகள் பெற்று 3ஆவது இடம் பெற்றார். இதன் மூலமாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவின் கோட்டையாக திகழ்ந்த பங்கிபூர் தொகுதியை கைப்பற்றி பிரசாந்த் கிஷோர் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.

Summary

Jan Suraaj party founder Prashant Kishor took oath as Bankipur MLA at the Bihar Legislative Assembly in the presence of Speaker Prem Kumar on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.