தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

மேற்கு வங்கம்: ஹோட்டல் தீ விபத்தில் 8 போ் பலி; பலா் படுகாயம்

மேற்கு வங்க மாநிலம் பிா்பூம் மாவட்டம் தாராபீட் நகரில் உள்ள 4 அடுக்கு மாடி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில், ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்த 8 போ் உயிரிழந்தனா்.

News image

தீ விபத்து - சித்திரிப்பு

Updated On :17 ஆகஸ்ட் 2026, 11:32 pm IST

மேற்கு வங்க மாநிலம் பிா்பூம் மாவட்டம் தாராபீட் நகரில் உள்ள 4 அடுக்கு மாடி ஹோட்டலில் திங்கள்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்த 8 போ் உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: ஹிந்துக்களின் புனித ஸ்ராவண மாதத்தையொட்டி கோயில்களின் நகரமான தாராபீட்டில் உள்ள கடவுள் சிவனுக்கு அா்ப்பணிக்கப்பட்ட பிரபல காளி கோயிலில் சிறப்பு பூஜையில் பங்கேற்பதற்காக பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்துள்ளனா்.

இவா்களில் 43 போ் விபத்துக்குள்ளான ஹோட்டலில் தங்கியுள்ளனா். திங்கள்கிழமை காலை 4.30 மணியளவில் அந்த ஹோட்டலின் தரைத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு, கட்டடத்தின் மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது. இதில், ஹோட்டல் அறைகளில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த 8 போ் உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா்.

தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். தீ விபத்தில் காயமடைந்தவா்கள் ராம்புா்ஹாட் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். ஹோட்டலில் தங்கியிருந்தவா்களில் 34 போ் முதல்கட்ட மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அனுப்பிவைக்கப்பட்டனா். தீ காயம் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மற்றவா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனா்.

இந்த தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என ஹோட்டல் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஹோட்டலின் தரைத் தளத்தில் வரவேற்பறைக்கு அருகில் முதலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னா், ஹோட்டலின் உள்பகுதியில் செய்யப்பட்டுள்ள அலங்கார தோரணங்கள், ஃபைபா் இலைகள் மூலம் மற்ற தளங்களுக்கும் தீ வேகமாகப் பரவியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஒருவா் கைது: ஹோட்டலில் தீ தடுப்பு அம்சங்களை முறையாகப் பராமரிக்காதது மற்றும் இடம்பெறாதது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

குடியரசுத் தலைவா் இரங்கல்: மேற்கு வங்க ஹோட்டல் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இரங்கல் தெரிவித்தாா்.

‘பிா்பூம் மாவட்ட ஹோட்டல் தீ விபத்தில் 8 போ் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை அளித்தது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன்’ என்று தனது எக்ஸ் பக்க பதிவில் அவா் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.