புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஹிமாசல் பருவமழை பாதிப்பு: 197 பேர் பலி; ரூ. 1,000 கோடி இழப்பு!

ஹிமாசலில் பருவமழை பாதிப்பு காரணமாக 197 பேர் பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹிமாசல் பிரதேசத்தில் ஜூன் 30 முதல் பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. - PTI

Published On :

ஹிமாசலில் பருவமழை பாதிப்பு காரணமாக 197 பேர் பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹிமாசல் பிரதேசத்தில் ஜூன் 30 முதல் பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. கனமழை காரணமாக அங்கு இதுவரை 197 பேர் பலியானதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மழை சார்ந்த பேரிடர்களில் 81 பேரும், சாலை விபத்துகளில் 116 பேரும் பலியாகினர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்கு ரூ. 1,000 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பொதுப்பணித் துறை மற்றும் நீர்ப்பாசனத் துறை போன்றவை பெருமளவு சேதத்தைச் சந்தித்துள்ளன.

ஹிமாசலில் உள்ள அவசரக்கால செயல்பாட்டு மையத்தின் தரவுகளின்படி மாநிலம் முழுவதும் 88 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இன்று காலை 105 சாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் மூடப்பட்ட சாலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கனமழையால் மண்டி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 32 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு அடுத்ததாக குல்லு (25 சாலைகள்) மற்றும் சிர்மூர் (10 சாலைகள்) மாவட்டங்கள் உள்ளன.

மழையின் காரணமாக மாநிலம் முழுவதும் 19 குடிநீர் விநியோகத் திட்டங்கள் பாதிக்கப்பட்டு, மின் விநியோகமும் பாதிப்படைந்துள்ளது.

மாநில அவசரகால நிர்வாக அமைப்புகள் மற்றும் களப்பணியாளர்கள் தொடர்ந்து சீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதிக்கு சுற்றுலா வரும் மக்கள் கனமழை தொடர்பான செய்திகளைக் கவனமாகப் பார்த்து திட்டமிடுமாறு அரசு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Summary

Reports indicate that 197 people have lost their lives due to the impact of the monsoon in Himachal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.