ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை! இடத்தை தமிழக அரசே தீர்மானிக்கட்டும்! - கேரள முதல்வர் பேச்சு

முல்லைப் பெரியாற்றில் புதிய அணையைக் கட்டுவதற்கான இடத்தை தமிழக அரசே தீர்மானிக்கட்டும் என கேரள முதல்வர் பேச்சு...

Keralam cm about mullaiperiyar dam

தமிழக முதல்வர் விஜய்யுடன் கேரள முதல்வர் வி.டி. சதீசன் - PTI

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:27 pm IST

முல்லைப் பெரியாற்றில் புதிய அணையைக் கட்டுவதற்கான இடத்தை தமிழக அரசே தீர்மானிக்கட்டும் என கேரள முதல்வர் வி.டி. சதீசன் கூறியுள்ளார்.

சென்னை அருகே கோவளத்தில் இன்று (ஆக. 20) நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான 31 ஆவது தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய், கேரள முதல்வர் வி.டி. சதீசன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் முக்கிய பிரச்னைகள், மாநிலங்கள் இடையேயான கூட்டுறவுகள், தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்ற கேரள முதல்வர் வி.டி. சதீசன் கேரளத்தின் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தீர்வுக்காண வேண்டுமென வலியுறுத்தினார். மேலும், முல்லைப் பெரியாற்றில் கட்டப்படும் புதிய அணையில் இருந்து தமிழகத்துக்கான நீர் பகிர்வு முழுவதுமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“முல்லைப் பெரியாற்றில் கட்டப்படும் புதிய அணையின் வடிவம், அமைவிடம் மற்றும் கட்டுமானப் பணிகளை தமிழக அரசே மேற்கொள்ளட்டும். அதற்கான முழுமையான செலவை கேரள அரசு ஏற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையானது பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாகவும்; இதனால், முல்லைப் பெரியாற்றில் புதிய அணையைக் கட்ட வேண்டுமெனவும் கேரள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பான முறையில் செயல்பட்டு வருவதாக, தமிழக அரசு உறுதியளித்து வருகிறது. மேலும், கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு அணையை நிர்வாகம் செய்வதற்கு தமிழக அரசு குத்தகை மூலம் 999 ஆண்டுகளுக்கு உரிமம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Kerala CM V.D. Satheesan stated that the Tamil Nadu government itself should decide the location for constructing a new dam on the Mullaperiyar River.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.