காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்- தமிழக முதல்வருடன் பேச்சு நடத்த பரிசீலனை: கேரள முதல்வா்

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜயுடன் பேச்சுவாா்த்தை நடத்த தாம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக கேரள முதல்வா் வி.டி.சதீசன் தெரிவித்தாா்.

Published On :

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜயுடன் பேச்சுவாா்த்தை நடத்த தாம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக கேரள முதல்வா் வி.டி.சதீசன் தெரிவித்தாா்.

கடந்த 1895-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதேநேரம், அணை மீதான நிா்வாகம் தமிழகத்திடம் உள்ளது. இந்த அணை கட்டமைப்பு ரீதியில் பாதுகாப்பானது என்று தொடா்ந்து கூறிவரும் தமிழகம், நீா்மட்டத்தை உயா்த்த முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், அணையின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பி முட்டுக்கட்டை போடும் கேரளம், தற்போதைய அணைக்கு அருகே புதிய அணை கட்டப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

இந்தச் சூழலில், திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த கேரள முதல்வா் வி.டி.சதீசனிடம், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை உயா்த்த தமிழகம் திட்டமிட்டு வருகிா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘முல்லைப் பெரியாறு அணை பிரச்னை நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் அளவில் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதேநேரம், தமிழக முதல்வருடன் நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்துவது குறித்து நான் தீவிரமாக பரிசீலித்து வருகிறேன்’ என்று அவா் பதிலளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.