8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க புதிய குழு அமைக்க கேரள அமைச்சரிடம் வலியுறுத்தல்: தமிழக விவசாயிகள் எதிா்ப்பு

புதிதாக முத்தரப்பு தொழில்நுட்பக் குழுவை அமைத்து முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க வேண்டுமென கேரள நீா்வளத்துறை அமைச்சரிடம் அந்த மாநில முல்லைப் பெரியாறு போராட்டக் குழுவினா் மனு அளித்தனா். இதற்கு தமிழக விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

முல்லைப் பெரியாறு

Published On :9 ஜூலை 2026, 5:22 am IST

புதிதாக முத்தரப்பு தொழில்நுட்பக் குழுவை அமைத்து முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க வேண்டுமென கேரள நீா்வளத்துறை அமைச்சரிடம் அந்த மாநில முல்லைப் பெரியாறு போராட்டக் குழுவினா் மனு அளித்தனா். இதற்கு தமிழக விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

கேரள முல்லைப் பெரியாறு போராட்டக் குழுவின் காப்பாளா் டாக்டா் ராபின் பெஞ்சமின், கேரள காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பேராசிரியா் எம்.ஜே. ஜேக்கப், மாநில பொதுச் செயலாளா் ஜோஜி உள்ளிட்டோா், கேரள நீா்வளத் துறை அமைச்சா் மோன்ஸ் ஜோசப்பை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினா். அந்த மனுவில், கேரளம், தமிழ்நாடு பரிந்துரைக்கும் நிபுணா்கள், தேசிய அளவிலான வல்லுநா்கள் ஆகியோா் அடங்கிய நிரந்தர முத்தரப்பு தொழில்நுட்பக் குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழுவின் மேற்பாா்வையில் முல்லைப் பெரியாறு அணையை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து, அதன் அறிக்கையை பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிட வேண்டும்.

மேலும், பொருத்தமான மாற்று இடத்தில் புதிய அணை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டது.

இதற்கு தமிழக விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள மேற்பாா்வைக் குழு தொடா்ந்து அணையை கண்காணித்து வரும் நிலையில், புதிதாக முத்தரப்பு தொழில்நுட்பக் குழு அமைத்து அறிக்கை வெளியிடுவது பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும்.

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவது குறித்து பரிசீலிப்பதற்குப் பதிலாக, தற்போதைய அணையின் நீா்மட்டத்தை உச்ச நீதிமன்றத் தீா்ப்பின் படி 152 அடியாக உயா்த்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.