வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா மீண்டும் திறப்பு!குடும்பத்துடன் இறுதிநாள்கள்.. கொலைக் குற்றவாளிக்கு 105 வயதில் விடுதலை! சூட்கேஸில் சடலம்! குற்றவாளிகள் இருந்த வீட்டில் பிரியாணி டபராவில் மனித உடல்! தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

அரசுத் திட்டப் பலன்களைப் பெறுவதற்கு ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும்? கிராம சபைக் கூட்ட வீடியோ வைரல்!

அரசுத் திட்டப் பலன்களைப் பெற அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய லஞ்சம் குறித்து கிராம சபைக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் குறித்து...

Rate card of bribes demanded by officials discussed at..

லஞ்சம் - சித்திரிப்பு

Published On :22 ஆகஸ்ட் 2026, 12:47 pm IST

லாத்தூர்: அரசுத் திட்டப் பலன்களைப் பெற அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய லஞ்சம் குறித்த 'பட்டியல்' கிராம சபைக் கூட்டத்தில் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரம் மாநிலம் லாத்தூர் மாவட்டம், சாகூர் தாலுகாவில் உள்ள அட்டோலா கிராமத்தில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில், ஊரக வேலைவாய்ப்பு மற்றும் பிற அரசுத் திட்டப் பலன்களை பெறுவதற்கு அல்லது ஒப்புதல்களுக்கு, ஒவ்வொரு திட்டத்திற்கும் அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து பட்டியல் போட்டு கிராமத் தலைவர் மற்றும் பிறர் வெளிப்படையாக விவாதித்துள்ளனர்.

அதாவது, வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஒரு கிணறு வெட்டுவதற்கு ஒப்புதல் பெற ரூ. 20,000 மற்றும் கால்நடை கொட்டகை அமைப்பதற்கு ஒப்புதல் பெற ரூ. 7,000 வசூலிக்கப்பட்டதாகவும், வீட்டு வசதி மற்றும் பிற அரசுத் திட்டங்களுக்கும் குறிப்பிட்ட தொகைகள் கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், மத்திய, மாநில அரசின் திட்டங்களின் பலன்களை பெறுவதற்கு நாங்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும் என்று கிராமத் தலைவரிடம் மக்கள் கேள்வி கேட்கின்றனர். அதற்கு பஞ்சாயத்து உறுப்பினர்களும் அதிகாரிகளும் லஞ்சம் கேட்பதாக அவர் பதிலளித்துள்ளார்.

மேலும், இந்த ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டுவர கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் முழுவதையும் பதிவு செய்து பொதுவெளியில் வெளியிட வேண்டும், அப்போதுதான் "உலகம் முழுவதற்கும் இது தெரியும்" என்றும் கிராமத் தலைவர் பேசுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், இந்த வைரல் வீடியோ விவகாரம் குறித்து எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்குமாறும், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு அந்த கிராமத் தலைவருக்கு வட்டார வளர்ச்சி அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சாகூர் தாலுகா வட்டார வளர்ச்சி அதிகாரி சந்தாஜி மானே கூறுகையில், இந்த நிகழ்ச்சி குறித்து கிராமத் தலைவரிடம் மூன்று நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமான விளக்கத்தையும், அதற்கான ஆதாரங்களையும், யாருக்கு, எப்போது, எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து விளக்கமாக தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று சாகூர் பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அதிகாரி சந்தாஜி மானே தெரிவித்தார்.

மேலும், புகார்கள் உண்மையானவை என்று தெரியவந்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசின் எந்தவொரு திட்டங்களின் பலன்களை பெறுவதற்கு யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். யாராவது பணம் கேட்டால், அவர்கள் குறித்து நேரடியாக என்னிடமோ அல்லது ஊழல் தடுப்புப் பிரிவிடனரிடமோ புகார் தெரிவிக்குமாறு அவர் கூறினார்.

Summary

When people questioned him about why the gram panchayat asked for money when they sought benefits of various government schemes,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.