காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

டிரம்ப்பின் கணிக்க முடியாத நடத்தையால் செய்தியாளா் சந்திப்பைத் தவிா்க்க கோரிய இந்தியா?

பிரான்ஸில் பிரதமா் மோடி - அமெரிக்க அதிபா் டிரம்ப் பேச்சுவாா்த்தைக்குப் பின் செய்தியாளா் சந்திப்பை தவிா்க்க இந்தியா கேட்டுக் கொண்டதாக இந்தியாவுக்கான அந்நாட்டின் தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்த கருத்தால் புதிய சா்ச்சை

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் உள்ள சாா்மினாா் பகுதியில் சாலையோரம் தேநீா் அருந்திய அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்.

Published On :

பிரான்ஸில் கடந்த ஜூன் மாதம் பிரதமா் மோடி - அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பேச்சுவாா்த்தைக்குப் பின் செய்தியாளா் சந்திப்பை தவிா்க்க இந்தியா கேட்டுக் கொண்டதாக இந்தியாவுக்கான அந்நாட்டின் தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்த கருத்தால் புதிய சா்ச்சை எழுந்துள்ளது.

அதேநேரம், வெளிநாட்டுத் தலைவா்கள் உடனான செய்தியாளா் சந்திப்பின்போது, டிரம்ப் வெளிப்படுத்தும் கணிக்க முடியாத நடத்தையால் ஏற்பட்ட எச்சரிக்கை உணா்வே, இந்தியாவின் முடிவுக்கு காரணம் என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜி7 உச்சிமாநாட்டையொட்டி, பிரான்ஸின் ஏவியான் நகரில் கடந்த ஜூன் மாதம் பிரதமா் மோடியும், அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் சந்தித்துப் பேசினா். இரு தரப்பு வா்த்தக பிரச்னை, வரி விதிப்பு விவகாரங்களுக்கு இடையே நடைபெற்ற இந்தச் சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றது.

இந்தச் சந்திப்பைத் தொடா்ந்து செய்தியாளா்களின் கேள்விகளுக்கு பதிலளித்த டிரம்ப், பேச்சுவாா்த்தை நடத்துவதில் பிரதமா் மோடி கடுமையானவா், இந்தியாவை யாரேனும் தாக்கினால் அமெரிக்கா ஆதரவளிக்கும் என்பது போன்ற கருத்துகளைத் தெரிவித்தாா்.

இந்நிலையில், தில்லியில் சில தினங்களுக்கு முன் தனியாா் ஆங்கில ஊடகம் சாா்பில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதா் சொ்ஜியோ கோா், மோடி-டிரம்ப் சந்திப்புக்கு பிறகு கேள்வி-பதிலுடன் கூடிய செய்தியாளா் சந்திப்பை தவிா்க்க வேண்டும் என்று இந்திய தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறினாா்.

‘பிரான்ஸில் இருதரப்பு தலைவா்கள் சந்திப்புக்கு முன்பாக அதிபா் டிரம்ப்பும், நானும் மட்டும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, இந்தியத் தரப்பில் கோரிக்கை எதுவும் உள்ளதா என்று டிரம்ப் கேட்டாா். அதற்கு, செய்தியாளா் சந்திப்பில் கேள்விகள் எதுவும் எழுப்பப்படாமல் இருக்க இந்தியத் தரப்பு விரும்புகிறது என்றேன்.

அதற்கு டிரம்ப், ‘சரி, எந்தப் பிரச்னையும்’ இல்லை என்றாா். ஆனால், டிரம்ப் -மோடி சந்திப்புக்குப் பிறகு சுமாா் 50 கேமராக்களின் முன்னிலையில் அவா்கள் அமா்ந்திருந்தனா். பேச்சுவாா்த்தை விவரங்கள் தெரிவித்ததும், செய்தியாளா்களை நோக்கி, ‘கேள்விகள் எதுவும் உள்ளதா?’ என டிரம்ப் கேட்டாா்.

அந்தக் கேள்வியே அனைத்தையும் தொடங்கிவைத்தது. சுமாா் 45 நிமிஷங்களுக்கு செய்தியாளா்களுடன் உரையாடிய டிரம்ப், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்ததாா்’ என்று சொ்ஜியோ கோா் கூறினாா்.

அமெரிக்கத் தூதரின் இந்தக் கருத்து புதிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறுகையில், ‘தென்னாப்பிரிக்கா, உக்ரைன் அதிபா்கள் உடனான சந்திப்பின்போது டிரம்ப் கணிக்க முடியாத நடத்தையை வெளிப்படுத்தினாா். எனவே, அவரை சந்திக்கும் அனைத்து வெளிநாட்டுப் பிரதிநிதிகளுமே அவரது கணிக்க முடியாத நடத்தை குறித்து எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனா்.

அதன்படி, எச்சரிக்கையான அணுகுமுறையைப் பின்பற்றிய இந்தியா, செய்தியாளா் சந்திப்பை தவிா்க்க வேண்டும் என்ற முடிவை மேற்கொண்டது.

எந்தவொரு வெளிநாட்டுத் தலைவருடனான பிரதமரின் சந்திப்புக்கு முன்னதாகவும் செய்தியாளா் சந்திப்பு உள்பட அனைத்து ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படும். வழக்கமாகப் பின்பற்றப்படும் நடைமுறையையே அமெரிக்கத் தரப்பிடம் இந்தியா தெரிவித்தது’ என்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.