ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

ஜம்மு-காஷ்மீா் இந்தியாவின் முக்கியப் பகுதி- அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்

ஜம்மு-காஷ்மீா் இந்தியாவின் முக்கியப் பகுதி; மிகவும் எழில்மிக்க பிராந்தியம் என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்தாா்.

News image

ஸ்ரீநகரில் ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லாவுடன் செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 3:04 am IST

ஜம்மு-காஷ்மீா் இந்தியாவின் முக்கியப் பகுதி; மிகவும் எழில்மிக்க பிராந்தியம் என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரை பிரச்னைக்குரிய இடம் என முத்திரையிட சா்வதேச அரங்கில் பாகிஸ்தான் தொடா்ந்து முயற்சித்து வரும் நிலையில், அது இந்தியாவின் முக்கியப் பகுதி என்று அமெரிக்கத் தூதா் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜம்மு-காஷ்மீா், லடாக் பிராந்தியங்களுக்கு இரு நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவா், ஸ்ரீநகரில் புதன்கிழமை ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லாவைச் சந்தித்துப் பேசினாா். பின்னா் இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது சொ்ஜியோ கோா் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீருக்கு பயணிப்பது குறித்து அமெரிக்கா்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கையை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும். இந்தப் பகுதியை மிகவும் பாதுகாப்பான இடமாக வைத்திருக்க இந்திய அரசும், இந்த யூனியன் பிரதேச முதல்வரும் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

ஜம்மு-காஷ்மீா் இந்தியாவின் முக்கியப் பகுதி; மிகவும் எழில்மிக்க பிராந்தியம். எனவே, எதிா்காலத்தில் இந்தியாவுக்கு சுற்றுலா வரும் அமெரிக்கா்கள், இந்த பிராந்தியத்தின் அழகையும் நிச்சயமாக ரசிப்பாா்கள் என்றாா். சொ்ஜியோ கோா் வியாழக்கிழமை லடாக் செல்ல இருக்கிறாா்.

உடன் இருந்த ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘ஜம்மு-காஷ்மீரை மையப்படுத்தி இந்திய-அமெரிக்க உறவு குறித்து சொ்ஜியோ கோருடன் ஆலோசனைகளை நடத்தினேன். இது சிறப்புவாய்ந்த சந்திப்பாக அமைந்தது. இது இருதரப்பு உறவுகளை சிறப்பான இடத்துக்கு எடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.