தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கர்களை வெளியேற வலியுறுத்தும் அமெரிக்கா!

அமெரிக்கர்கள் மத்திய கிழக்கிலிருந்து வெளியேறத் தயாராக இருக்குமாறு அமெரிக்கத் தூதரகங்கள் வலியுறுத்தியுள்ளன.

News image

ஈரானில் டிரம்ப்புக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள பதாகை

Updated On :1 ஆகஸ்ட் 2026, 8:25 pm IST

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எதிர்பாராத பதற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிப்பு விடுத்துள்ள அமெரிக்கத் தூதரகங்கள், அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியேறத் தயாராக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளன.

ஜெருசலேம், அம்மான், பாக்தாத் பகுதிகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் சமூக ஊடகங்களில் ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன. அதில், மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்தால், இந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கர்கள் இங்கிருந்து வெளியேறத் தயாராக இருக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், “மத்திய கிழக்கில் தற்போது இருக்கும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும். விமானங்கள் ரத்தாவது, வான்வெளி மூடப்படுதல் மற்றும் பயணங்களில் ஏற்படக்கூடிய இடையூறுகள் ஆகியவற்றிற்குத் தயாராக இருக்கவேண்டும். உள்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்தில் ஜோர்டானில் ஈரான் ஏவுகணைத் தாகுதல்களை நடத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, அங்குள்ள அமெரிக்கர்கள் ராணுவத் தளங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும், இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்கள் அங்குள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அமெரிக்கா அறிவுறுத்தியிருந்தது.

ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், "எந்த முன்னறிவிப்பும் இன்றி பிராந்தியத்தின் சில பகுதிகளிலும், எகிப்து போன்ற குறிவைக்கப்படாத இடங்களிலும் ஈரான் கணிக்க முடியாத தாக்குதல்களை நடத்தி வருகின்றது” எனக் குறிப்பிட்டிருந்தனர்.

சில நாள்களுக்கு முன், எகிப்து துறைமுகத்தில் நின்ற அமெரிக்க எரிவாயுக் கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி, எகிப்து விசாரித்து வரும் நிலையில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக யார்மீதும் அவர்கள் குற்றம் சாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு பாதுகாப்பு கேடயமாக செயல்படும் எந்த நாடும் இந்தப் போரில் தீப்பிழம்புகளால் சூழப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல நாள்கள் அமைதிக்குப் பின், ஈரானும் அமெரிக்காவும் இந்த வாரம் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளனர். ஆனால், நேற்றும் இன்றும் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படவில்லை.

ஆனால், அமெரிக்கா தனது தூதரகங்கள் மூலம் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Summary

US urges Americans to leave the Middle East!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.