
ஆந்திரத்தில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி கோர விபத்து! 7 பேர் பலி
ஆந்திரத்தில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பற்றி...
ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்து - X
ஆந்திரத்தில் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள சிலகலூரிபேட் தேசிய நெடுஞ்சாலையில் விஜயவாடாவிலிருந்து திருப்பதிக்குச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது.
இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஆட்டோவில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 4 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் வேலூரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள். அவர்கள் வேலைக்குச் செல்வதற்காக ஆட்டோவில் பயணம் செய்தள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
Private Bus Collides with Auto, 7 Dead near Palnadu in andhra pradesh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





