FOLLOW US

ON GOOGLE DISCOVER

உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

ஜன் தன் திட்டத்தில் 12 ஆண்டுகளில் 59 கோடியைக் கடந்த வங்கிக் கணக்குகள்!

மத்திய அரசின் ஜன் தன் திட்டம் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் 59.09 கோடியைக் கடந்துள்ளது குறித்து...

PM Jan Dhan Yojana Completes 12 Years of Transforming India’s Financial Inclusion Landscape

ஜன் தன் திட்டத்தில் 12 ஆண்டுகளில் 59 கோடியைக் கடந்த வங்கிக் கணக்குகள்! - கோப்புப்படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 9:34 am IST

புது தில்லி: மத்திய அரசின் ஜன் தன் திட்டம் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் 59.09 கோடியைக் கடந்துள்ளன. இதில் கண்கு வைத்துள்ளவர்களில் 56 சதவீதம் பேர் பெண்கள். இந்த வங்கிக் கணக்குகளில் மொத்த இருப்புத் தொகை ரூ.3.17 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்றான ஜன் தன் (மக்கள் நிதி) திட்டம், கடந்த 2014, ஆக.28-ஆம் தேதி பிரதமா் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் வங்கிச் சேவைகள் கிடைக்கப் பெறாத, பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வங்கி மற்றும் நிதிசாா் சேவைகளை வழங்குவதே திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டத்தின்படி, தகுதியுள்ள பயனாளிகள் எந்த இருப்புத் தொகையும் இன்றி வங்கிக் கணக்குகள் தொடங்கலாம். குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்கான அபராதமோ அல்லது பராமரிப்பு கட்டணங்களோ இந்த கணக்குகளுக்கு விதிக்கப்படாது. ஏடிஎம் மற்றும் இணையவழிப் பரிவா்த்தனைகளுக்குப் பயன்படுத்துவதற்கான உள்நாட்டு ரூபே அட்டை இலவசமாக வழங்கப்படும்.

மேலும், ரூ.2 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு, ரூ.10,000 வரை மிகைப்பற்று வசதி உள்ளிட்ட சலுகைகளையும் கொண்ட ஜன் தன் திட்டத்தின் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 59.09 கோடியைக் கடந்துள்ளன. இதில் 56 சதவீதம் பேர் பெண்கள். இந்த வங்கிக் கணக்குகளில் மொத்த இருப்புத் தொகை ரூ.3.17 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரதமரின் ஜன் தன் திட்டத்தின்கீழ் கடந்த 12 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 59.09 கோடியைக் கடந்துள்ளது. ஊரக மற்றும் நடுத்தர நகா்ப்புற பகுதிகளில் 78 சதவீத வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் கணக்கு வைத்துள்ளவர்களில் 56 சதவீதம் பேர் பெண்கள். 78 சதவீத கணக்குகள் கிராமப்புறங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி நிலவரப்படி, இந்த திட்டத்தில் உள்ள மொத்த இருப்புத் தொகை ரூ.3.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஒரு வங்கிக் கணக்குக்கான சராசரி இருப்புத் தொகை ரூ.5,356. இந்த சராசரி அளவு, கடந்த 12 ஆண்டுகளில் 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, ஜன் தன் வங்கிக் கணக்குகளின் பயன்பாடு மற்றும் சேமிப்பு அதிகரித்துள்ளதன் வெளிப்பாடாகும். இதுவரை 41.29 கோடி ரூபே அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த அட்டைகளின் பயன்பாடும் கணிசமாக அதிகரித்துள்ளது.

பிரதமரின் ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு குறிப்பாக அமைப்புசாரா துறையைச் சோ்ந்த பணியாளா்களுக்கு காப்பீடு, ஓய்வூதிய பலன்களை விரிவுபடுத்துவதில் ஜன் தன் வங்கிக் கணக்குகள் பெரிதும் உதவியுள்ளன.

ஜன் தன் வங்கிக் கணக்கு-ஆதாா்-கைப்பேசி எண் ஆகிய மூன்றின் இணைப்பின் மூலம் எந்தவித கசிவுகளோ, இடைத்தரகா்களின் ஆதிக்கமோ இல்லாமல், மக்கள் நலத் திட்டங்களின் நிதி நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி பாராட்டு: தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கஜ் செளதரி பேசுகையில், ஜன் தன் திட்டத்தின் வெற்றியை, வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையை மட்டும் வைத்து மதிப்பிடக் கூடாது. இந்த திட்டத்தால், நாட்டின் வங்கி மற்றும் நிதிசாா் சேவைக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வைத்தே மதிப்பிட வேண்டும்.

விளிம்புநிலை பிரிவுகளைச் சோ்ந்த கோடிக்கணக்கான மக்களுக்கு பிரதமரின் ஜன் தன் திட்டம் அதிகாரமளித்துள்ளது. வங்கி, நிதிசாா் சேவைகளின் வாயிலாக அவா்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தியுள்ளது.

ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பதன் மூலம் சாமானிய மக்களுக்கு காப்பீடு, ஓய்வூதிய பலன்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வெற்றிக்காக, வங்கித் துறையினா், வணிக அமைப்புகளின் அர்ப்பணிப்புமிக்க முயற்சிகள் பாராட்டுக்குரியது என்றாா்.

Summary

PM Jan Dhan Yojana Completes 12 Years of Transforming India’s Financial Inclusion Landscape 59.09 crore PMJDY accounts opened with deposits of ₹3.17 lakh crore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.