FOLLOW US

ON GOOGLE DISCOVER

புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமி

இந்தியச் சதுரங்க விளையாட்டின் பெருமை! - பிரக்ஞானந்தாவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து!

அமெரிக்காவில் கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து...

vice president wishes  praggnananda

பிரக்ஞானந்தாவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து... - எக்ஸ்

Published On :28 ஆகஸ்ட் 2026, 5:18 pm IST

அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான கிராண்ட் செஸ் டூர் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் எனும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்த நிலையில், கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவின் சாதனை உலக அரங்கில் வளர்ந்து வரும் இந்தியச் சதுரங்க விளையாட்டின் பெருமை எனக் கூறி குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (ஆக. 28) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரராகத் திகழும் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, பிரக்ஞானந்தாவின் திறமை, மன உறுதி மற்றும் இடைவிடாத முயற்சி ஆகியவற்றுக்குச் சான்றாக அமைந்துள்ளது. அவரது இந்தச் சிறப்பான சாதனை உலக அரங்கில் இந்தியச் சதுரங்க விளையாட்டின் வளர்ந்து வரும் பெருமையை மேலும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.

மேலும் பல உயரங்களை அவர் எட்டி, நாட்டிற்குப் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Summary

Vice President Radhakrishnan has congratulated Praggnanandha on winning the championship title at the Grand Chess Tour tournament.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.