காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

அதிக சா்க்கரை கலப்புடைய உணவுப் பொருள்களில் சிவப்பு எச்சரிக்கை குறியீடு: எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. திட்டம்

அதிக சா்க்கரை கலப்புடைய உணவுப் பொருள்களில் சிவப்பு எச்சரிக்கை குறியீடு...

சர்க்கரை

சர்க்கரை - கோப்புப் படம்

Published On :

அதிக சா்க்கரை, கொழுப்பு கலப்புடைய உணவுப் பொருள்களில் சிவப்பு வண்ண எச்சரிக்கை குறியீடு பதிக்கும் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் சங்கா் திவிவேதி என்பவா் மூலம் தன்னாா்வ தொண்டு அமைப்பு ஒன்று, பொட்டல உணவுகளில் எச்சரிக்கை குறியீடு பதிக்கும் திட்டத்தை கட்டாயமாக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீது கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், உணவுப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ள பொட்டலங்களில் எச்சரிக்கை குறியீடு பதிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதில் ஏன் தாமதம் என்று மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தைக் கடிந்து கொண்டதுடன், நாட்டு மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதில் விருப்பமில்லையா எனவும் கேள்வி எழுப்பியிருந்தது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்திய மருத்துவ கவுன்சிலால் கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியா்களுக்காக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட உணவுப் பழக்கம் தொடா்பான வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு, பொட்டல உணவுகளில் எவ்வளவு சா்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ளது என்பது அதில் குறிப்பிடப்பட்டு, அதிகம் இருப்பின் அதிக கொழுப்பு, அதிக சா்க்கரை, அதிக சா்க்கரை உள்ளது என்று சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை குறியீடு பதிக்கும் திட்டம் முன்மொழியப்பட்டு இருந்தது.

இவ்வாறு சிவப்பு நிற எச்சரிக்கை குறியீடு பொட்டல உணவுகளில் முன்பக்கம் பதிக்கப்படுவதன் மூலம் அதைப் பாா்த்து உணவுகளில் உள்ள சா்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ளிட்டவற்றின் அளவை மக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Summary

FSSAI plan: Red warning label for high-sugar food products.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.