
நேபாள வெள்ளம்: திபெத் பகுதியில் தவித்த 43 மகாராஷ்டிர பக்தர்கள் தாயகம் திரும்பினர்!
நேபாள பெரு வெள்ளத்தில் திபெத் பகுதியில் சிக்கிய மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பற்றி....

திபெத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள்.
நேபாள பெரு வெள்ளத்தில் திபெத் பகுதியில் சிக்கிய மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 43 பக்தர்கள் தாயகம் திரும்பினர்.
கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் போது நேபாள-சீன எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவித்த தாணேவாசிகள் உட்பட மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 43 பக்தர்கள் அடங்கிய குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பாகத் திரும்பினர்.
தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் பயணம் செய்த இவர்கள், சீனாவுக்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே திமுரே எல்லைப் பகுதியில் சிக்கிக்கொண்டனர்.
தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அதில் பணிபுரிந்த சிலர் பலியானதாகவும் பக்தர்களில் ஒருவர் தெரிவித்தார்.
தனது மனைவி பிரதீபாவுடன் பயணம் செய்த கல்யாண் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் சாந்தாராம் மானே, மும்பையில் தரையிறங்கியதும் தனது நிம்மதியை வெளிப்படுத்தினார்.
"நாங்கள் காலை உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, அந்த ஹோட்டல் ஊழியர்களுடன் சேர்த்து அடித்துச் செல்லப்பட்டதை அறிந்ததும் நாங்கள் முற்றிலுமாக அதிர்ச்சியில் உறைந்துபோனோம்" என்று அவர் கூறினார்.
சீன அதிகாரிகளின் உத்தரவைத் தொடர்ந்து, பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் உலகம் முழுவதிலுமிருந்து வந்த பக்தர்கள் சாகா பகுதியில் சிக்கித் தவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
மகாராஷ்டிர அரசு மற்றும் தாணே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அவசரக்கட்டுப்பாட்டு அறை இந்த குழுவின் இருப்பிடத்தை தொடர்ந்து கண்காணித்து வந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒன்பது நேபாள சுற்றுலா ஊழியர்களுடன் பயணித்த பக்தர்கள், இறுதியில் ஆகஸ்ட் 29ஆம் தேதி காத்மாண்டுவிற்குத் திரும்பி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நேபாள ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
A group of 43 pilgrims from Maharashtra, including residents of Thane, returned on Sunday after being stranded amidst flash floods and landslides along the Nepal-China border during their Kailash Mansarovar Yatra.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







