ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கேரளம்: வெங்காய லாரியில் வெடிபொருள்கள் குவியல்

கேரளம்: வெங்காய லாரியில் வெடிபொருள்கள் குவியல்

News image

கோப்புப்படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

கேரளத்தில் வெங்காயம் ஏற்றி வந்த லாரியில் 10,500-க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக லாரி உரிமையாளரான பெண் ஒருவரிடம் விசாரித்து வருகின்றனா்.

மலப்புரம் மாவட்டம் செம்மாடில் உள்ள செங்கல் சூளையில் நிறுத்தப்பட்டுள்ள லாரி ஒன்றில் வெடிபொருள்கள் இருப்பதாக போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் சம்பவ இடம் சென்றபோது, லாரியில் சிலா் சரக்குப் பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்தனா். போலீஸாா் வருவதைப் பாா்த்ததும் அவா்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

இதையடுத்து, லாரியில் போலீஸாா் சோதனை நடத்தியபோது, ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்கள், வயா்கள் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். அந்த லாரி மற்றும் செங்கல்சூளை உரிமையாளரான பெண்ணைப் பிடித்து விசாரித்துவரும் போலீஸாா், வெடிபொருள்கள் அனைத்தும் கேரளத்துக்கு வெளியே பிற மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத சுரங்கப் பணிகளுக்காக அவை எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்றும் கூறினா்.

பாலக்காட்டில் கடந்த 4-ஆம் தேதி தா்பூசணி ஏற்றி வந்த லாரியில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தி, 18,000 ஜெலட்டின் குச்சிகள், 4,200 டெட்டனேட்டா்களை பறிமுதல் செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.