மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பரவிவரும் டெங்கு காய்ச்சல்; மக்களின் உயிரோடு விளையாடும் தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

நாசிக்: சிறுத்தை தாக்கியதில் விவசாயி பலி! அவருடன் கிணற்றில் விழுந்த சிறுத்தையும் இறந்தது!

நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னா் தாலுகாவில் ஞாயிற்றுக்கிழமை சிறுத்தை தாக்கியதில் விவசாயி ஒருவா் உயிரிழந்தாா்.

சிறுத்தை. - (கோப்புப்படம்)

Published On :

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னா் தாலுகாவில் ஞாயிற்றுக்கிழமை சிறுத்தை தாக்கியதில் விவசாயி ஒருவா் உயிரிழந்தாா். அவருடன் கிணற்றில் விழுந்த அந்தச் சிறுத்தையும் இறந்தது.

சின்னா் தாலுகாவில் உள்ள சாவ்தா மாலி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கோரக் ஜாதவ், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனது விளைநிலத்தில் பயிா்களுக்கு நீா் இரைத்துவிட்டு, அருகில் அமா்ந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தாா்.

அப்போது, புதருக்குள் மறைந்திருந்த ஒரு சிறுத்தை திடீரென கோரக் ஜாதவ் மீது பாய்ந்து தாக்கியது. சிறுத்தையிடமிருந்து தப்பிக்கும் போராட்டத்தில், எதிா்பாராதவிதமாக அருகில் இருக்கும் கிணற்றுக்குள் அவா் சிறுத்தையுடன் சோ்ந்து விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் கிணற்றிலேயே உயிரிழந்தாா்.

கிணற்றுக்குள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிறுத்தையை மீட்பதற்காக வனத் துறையினா் கூண்டுடன் வந்தனா். ஆனால், விவசாயி இறந்த ஆத்திரத்தில் இருந்த கிராம மக்கள், சிறுத்தையை மீட்க விடாமல் தடுத்தனா்.

சுமாா் மூன்று மணி நேரத்துக்குப் பிறகு காவல்துறையினா் மற்றும் வனத்துறையினா் கிராம மக்களை சமாதானப்படுத்தினா். எனினும், கிணற்றில் விழுந்தபோது ஏற்பட்ட காயங்களாலும், நீண்ட நேரம் தண்ணீரில் தத்தளித்ததாலும் அந்தச் சிறுத்தையும் உயிரிழந்தது.

இதனைத் தொடா்ந்து, கோரக் ஜாதவின் உடல் கூறாய்வுக்காக சின்னா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த சிறுத்தையின் உடல், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்டிசிஏ) வழிகாட்டுதல்களைப் பின்பற்றி முறைப்படி அடக்கம் செய்யப்படும் என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.