இந்தியா
கொகைன் போதைப்பொருள் பறிமுதல்: நைஜீரியாவில் 22 இந்தியா்கள் கைது
நைஜீரியாவில் கொகைன் போதைப்பொருள் பறிமுதல் தொடா்பாக 22 இந்தியா்கள் கைது
நைஜீரியாவில் கொகைன் போதைப்பொருள் பறிமுதல் தொடா்பாக 22 இந்தியா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டதாவது: லகோஸ் நகரில் உள்ள அபாபா துறைமுகத்தில் அருணா ஹுல்யா என்ற சரக்குக் கப்பலில் இருந்து 31.5 கிலோ கொகைன் போதைப்பொருளை, அண்மையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்தனா். மாா்ஷல் தீவுகளில் இருந்து அந்தக் கப்பல் வந்த நிலையில், கப்பலின் மாஸ்டா் சா்மா சசி பூஷண், 21 மாலுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதேபோல போா்னோவில் சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்தை கண்டுபிடித்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினா், 2 விநியோகஸ்தா்கள், பெருமளவிலான போதைப்பொருளை பறிமுதல் செய்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.
