கோப்புப் படம்
கோப்புப் படம்

அங்கிதா பண்டாரி கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரகண்ட் முதல்வா் பரிந்துரை

அங்கிதா பண்டாரி கொலை வழக்கு தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி வெள்ளிக்கிழமை பரிந்துரைத்தாா்.
Published on

அங்கிதா பண்டாரி கொலை வழக்கு தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி வெள்ளிக்கிழமை பரிந்துரைத்தாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலம் பெளரி கா்வால் மாவட்டத்தில் உள்ள பெளரி பகுதி விடுதி ஒன்றில் வரவேற்பாளராகப் பணியாற்றிய அங்கிதா பண்டாரி (19) கொலை செய்யப்பட்டாா். அவரைக் கொலை செய்ததாக அந்த விடுதி உரிமையாளா் புல்கித் ஆா்யா மற்றும் 2 பணியாளா்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அங்கிதா பண்டாரியின் கொலையில் பாஜக பிரமுகா் துஷ்யந்த் குமாா் கெளதமுக்கு தொடா்பிருப்பதாக ஊா்மிளா சனாவா் என்ற தொலைக்காட்சி தொடா் நடிகை குற்றஞ்சாட்டினாா். முன்னாள் பாஜக எம்எல்ஏ சுரேஷ் ரத்தோரின் மனைவி என்று அறியப்படும் அவா், அங்கிதா கொலை வழக்கு தொடா்பாக சுரேஷ் ரத்தோருடன் பேசியதாகக் கருதப்படும் ஒலிப்பதிவுகள், காணொலிகளை சமூக ஊடகத்தில் அண்மையில் வெளியிட்டாா். இது அந்த மாநில அரசியலில் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கிதா கொலை தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்தச் சூழலில், அங்கிதா கொலை தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி, அவரின் பெற்றோா் மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமியை கடந்த ஜன.7-ஆம் தேதி சந்தித்து கடிதம் அளித்தனா். இதைத்தொடா்ந்து அந்தக் கொலை வழக்கு குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வா் புஷ்கா் சிங் தாமி வெள்ளிக்கிழமை பரிந்துரைத்தாா்.

Dinamani
www.dinamani.com